3. உச்சிநாதர் கோயில்
இறைவன் உச்சிநாதர்
இறைவி கனகாம்பிகை
தீர்த்தம் கிருபாசமுத்திரம்
தல விருட்சம்  
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருநெல்வாயில், தமிழ்நாடு
வழிகாட்டி சிதம்பரத்திற்கு தென்கிழக்கே 5 கி. மீ. தொலைவில் உள்ளது. தற்காலத்தில் 'சிவபுரி' என்று அழைக்கப்படுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தெற்கில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Tirunelvayal Gopuramநெல் வயல்கள் அதிகமாக உள்ள இடமாதலால் 'நெல்வாயில்' என்று பெயர் பெற்றது. அருகில் உள்ள ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தரின் திருமணம் நடைபெற்றபோது, அதற்கு வருகை தந்த அடியார்கள் இந்த தலத்தில் தங்கியிருந்தனர். அவர்களின் பசி தீர, சிவபெருமான் அடியார்களுக்கு அமுது ஏற்பாடு அளித்த சிறப்புப் பெற்ற தலம்.

Tirunelvayal Utsavarமூலவர் உச்சிநாதர், லிங்கத் திருமேனியின் பின்புறம் அம்மையப்பர் திருவுருவங்கள் உள்ளன. அம்பிகை கனகாம்பிகை. அழகிய சிறிய மூர்த்தங்கள். அகத்திய முனிவர் வழிபட்ட தலம். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம். இக்கோயில் உள்ள அதே தெருவில் 'திருக்கழிப்பாலை' என்னும் மற்றொரு தேவாரத் தலமும் உள்ளது.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். காலை 6 மணி முதல் 11 வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 வரையிலும் நடை திறந்திருக்கும்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com