| 725. சீதள வாரிஜ |
ராகம் - கேதாரம் தாளம் - அங்கதாளம் (8 1/2) (எடுப்பு - 1/2 தள்ளி) தகதிமி தகதிமி - 4, தகதகிட - 2 1/2, தகதிமி - 2 |
தானன தானன தானன தானன தானன தானன தானன தானன தானன தானன தானன தானன - தனதான |
| பாடல் |
சீதள வாரிஜ பாதாந மோநம
நாரத கீதவி நோதந மோநம
சேவல மாமயில் ப்ரீதாந மோநம - மறைதேடுஞ்
சேகர மானப்ர தாபாந மோநம
ஆகம சாரசொ ரூபாந மோநம
தேவர்கள் சேனைம கீபாந மோநம - கதிதோயப்
பாதக நீவுகு டாராந மோநம
மாவசு ரேசக டோராந மோநம
பாரினி லேஜய வீராந மோநம - மலைமாது
பார்வதி யாள்தரு பாலாந மோநம
நாவல ஞானம னோலாந மோநம
பாலகு மாரசு வாமீந மோநம - அருள்தாராய்
போதக மாமுக னேரான சோதர
நீறணி வேணியர் நேயாப்ர பாகர
பூமக ளார்மரு கேசாம கோததி - யிகல்சூரா
போதக மாமறை ஞானாத யாகர
தேனவிழ் நீபந றாவாரு மார்பக
பூரண மாமதி போலாறு மாமுக - முருகேசா
மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
மாநில மேழினு மேலான நாயக - வடிவேலா
வானவ ரூரினும் வீறாகி வீறள
காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
2 |