அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
பொதுப் பாடல்கள்
1201. விரைசொரியும்
ராகம் -
தாளம் -
தனதனன தனதனன தனன தாத்ததன
தனதனன தனதனன தனன தாத்ததன
தனதனன தனதனன தனன தாத்ததன - தனதான
பாடல்
விரைசொரியும்ரு கமதமு மலரும் வாய்த்திலகு
விரிகுழலு மவிழநறு மெழுகு கோட்டுமுலை
மிசையில்வரு பகலொளியை வெருவ வோட்டுமணி - வகையாரம்

விடுதொடைகள் நகநுதியி லறவும் வாய்த்தொளிர
விழிசெருக மொழிபதற அமுது தேக்கியகை
விதறிவளை கலகலென அழகு மேற்பொழிய - அலர்மேவும்

இருசரண பரிபுரசு ருதிக ளார்க்கவச
மிலகுகடல் கரைபுரள இனிமை கூட்டியுள
மிதம்விளைய இருவரெனு மளவு காட்டரிய - அநுராகத்

திடைமுழுகி யெனதுமன தழியு நாட்களினு
மிருசரண இயலும்வினை யெறியும் வேற்கரமு
மெழுதரிய திருமுகமு மருளு மேத்தும்வகை - தரவேணும்

அரிபிரம ரடிவருட வுததி கோத்தலற
அடல்வடவை யனலுமிழ அலகை கூட்டமிட
அணிநிணமு மலைபெருக அறையும் வாச்சியமு - மகலாது

அடல்கழுகு கொடிகெருட னிடைவி டாக்கணமு
மறுகுறளு மெறிகுருதி நதியின் மேற்பரவ
அருணரண முகவயிர வர்களு மார்ப்பரவ - மிடநாளும்

பரவுநிசிடி சரர்முடிகள் படியின் மேற்குவிய
பவுரிகொடு திரியவரை பலவும் வேர்ப்பறிய
பகர்வரிய ககனமுக டிடிய வேட்டைவரு - மயில்வீரா

படருநெறி சடையுடைய இறைவர் கேட்குரிய
பழயமறை தருமவுன வழியை யார்க்குமொரு
பரமகுரு பரனெனவு மறிவு காட்டவல - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 200

1202. வேலொத்து
ராகம் -
தாளம் -
தானத்த தந்த தந்த தானத்த தந்த தந்த
தானத்த தந்த தந்த - தனதான
பாடல்
வேலொத்து வென்றி யங்கை வேளுக்கு வெஞ்ச ரங்க
ளாமிக்க கண்க ளென்று - மிருதோளை

வேயொக்குb மன்று கொங்கை மேல்வெற்ப தென்று கொண்டை
மேகத்தை வென்ற தென்று - மெழில்மாதர்

கோலத்தை விஞ்ச வெஞ்சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர்
கூடத்தில் நின்று நின்று - குறியாதே

கோதற்ற நின்ப தங்கள் நேர்பற்றி யின்ப மன்பு
கூர்கைக்கு வந்து சிந்தை ழூ- குறுகாதோ

ஞாலத்தை யன்ற ளந்து வேலைக்கு ளுந்து யின்று
நாடத்தி முன்பு வந்த - திருமாலும்

நாடத்த டஞ்சி லம்பை மாவைப்பி ளந்த டர்ந்து
நாகத்த லங்கு லுங்க - விடும்வேலா

ஆலித்தெ ழுந்த டர்ந்த ஆலத்தை யுண்ட கண்ட
ராகத்தில் மங்கை பங்கர் - நடமாடும்

ஆதிக்கு மைந்த னென்று நீதிக்குள் நின்ற அன்பர்
ஆபத்தி லஞ்ச லென்ற - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 201

1203. அடியார்மனஞ்சலிக்க
ராகம் - ஸாதா
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2, தகிட - 1 1/2
தனதான தந்த தந்த தனதான தந்த தந்த
தனதான தந்த தந்த - தனதான
பாடல்
அடியார்ம னஞ்சலிக்க எவராகி லும்ப ழிக்க
அபராதம் வந்து கெட்ட - பிணிமூடி

அனைவோரும் வந்து சிச்சி யெனநால்வ ருஞ்சி ரிக்க
அனலோட ழன்று செத்து - விடுமாபோற்

கடையேன்ம லங்கள் முற்று மிருநோயு டன்பி டித்த
கலியோடி றந்து சுத்த - வெளியாகி.க்

களிகூர என்ற னுக்கு மயிலேறி வந்து முத்தி
கதியேற அன்பு வைத்து - னருள்தாராய்

சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை சுத்த
தழல்மேனி யன்சி ரித்தொர் - புரமூணும்

தவிடாக வந்தெ திர்த்த மதனாக முஞ்சி தைத்த
தழல்பார்வை யன்ற ளித்த - குருநாதா

மிடிதீர அண்ட ருக்கு மயிலேறி வஞ்சர் கொட்டம்
வெளியாக வந்து நிர்த்த - மருள்வோனே

மின நூல்ம ருங்குல் பொற்பு முலைமாதி ளங்கு றத்தி
மிகுமாலொ டன்பு வைத்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 202

1204. அடியில் விடா
ராகம் -
தாளம் -
தனதன தாத்தன தனதன தாத்தன
தனதன தாத்தன - தனதான
பாடல்
அடியில்வி டாப்பிண மடையவி டாச்சிறி
தழியுமுன் வீட்டுமு - னுயர்பாடை

அழகொடு கூட்டுமிடி னழையுமின் வார்ப்பறை
யழுகையை மாற்றுமி - னொதியாமுன்

எடுமினி யாக்கையை யெனஇடு காட்டெரி
யிடைகொடு போய்த்தமர் - சுடுநாளில்

எயினர்கு லோத்தமை யுடன்மயில் மேற்கடி
தெனதுயிர் காத்திட - வரவேணும்

மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படு
மதகரி கூப்பிட - வளையூதி

மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றிய
மகிபதி போற்றிடு - மருகோனே

படர்சடை யாத்திகர் பரிவுற ராட்சதர்
பரவையி லார்ப்பெழ - விடும்வேலாற்

படமுனி யாப்பணி தமனிய நாட்டவர்
பதிகுடி யேற்றிய - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 203

1205. அப்படியேழும்
ராகம் -
தாளம் -
தத்தன தான தானன தத்தன தான தானன
தத்தன தான தானன - தனதான
பாடல்
அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி
னக்ரம்வி யோம கோளகை - மிசைவாழும்

அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிய
னைத்துரு வாய காயம - தடைவேகொண்

டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல
கிற்றடு மாறி யேதிரி - தருகாலம்

எத்தனை யூழி காலமெ னத்தெரி யாது வாழியி
னிப்பிற வாது நீயருள் - புரிவாயே

கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறை
கற்புடை மாது தோய்தரு - மபிராம

கற்புர தூளி லேபன மற்புய பாக சாதன
கற்பக லோக தாரண - கிரிசால

விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவல
வெட்சியு நீப மாலையு - மணிவோனே

மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னீறெழ
விக்ரம வேலை யேவிய - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 204

1206. அயில்விலோசன
ராகம் -
தாளம் -
தனன தானனம் தனன தானனம்
தனன தானனம் - தனதான
பாடல்
அயில்வி லோசனங் குவிய வாசகம்
பதற ஆனனங் - குறுவெர்வுற்

றளக பாரமுங் குலைய மேல்விழுந்
ததர பானமுண் - டியல்மாதர்

சயில பாரகுங் குமப யோதரந்
தழுவு மாதரந் - தமியேனால்

தவிரொ ணாதுநின் கருணை கூர்தருந்
தருண பாதமுந் - தரவேணும்

கயிலை யாளியுங் குலிச பாணியுங்
கமல யோனியும் - புயகேசன்

கணப ணாமுகங் கிழிய மோதுவெங்
கருட வாகனந் - தனிலேறும்

புயலி லேகரும் பரவ வானிலும்
புணரி மீதுனுங் - கிரிமீதும்

பொருநி சாசரன் தனது மார்பினும்
புதைய வேல்விடும் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 205

1207. அருக்கி
ராகம் -
தாளம் -
தனத்த தத்தனா தனத்த தத்தனா
தனத்த தத்தனா - தனதான
பாடல்
அருக்கி மெத்ததோள் திருத்தி யுற்றுமோர்
பசைத்து வக்குமா - லிளைஞோரை

அழைத்து மிக்ககா சிழைத்து மெத்தைமீ
தணைத்து மெத்தமா - லதுகூர

உருக்கி யுட்கொள்மா தருக்கு ளெய்த்துநா
வுலற்றி யுட்குநா - ணுடன்மேவி

உழைக்கு மத்தைநீ யொழித்து முத்திபா
லுறக்கு ணத்ததா - ளருள்வாயே

சுருக்க முற்றமால் தனக்கு மெட்டிடா
தொருத்தர் மிக்கமா - நடமாடுஞ்

சுகத்தி லத்தர்தா மிகுத்த பத்திகூர்
சுரக்க வித்தைதா - னருள்வோனே

பெருக்க வெற்றிகூர் திருக்கை கொற்றவேல்
பிடித்து குற்றமா - ரொருசூரன்

பெலத்தை முட்டிமார் தொளைத்து நட்டுளோர்
பிழைக்க விட்டவோர் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 206

1208. அரும்பினாற்றனி
ராகம் -
தாளம் -
தனந்த தாத்தனத் தனந்த தாத்தனத்
தனந்த தாத்தனத் - தனதான
பாடல்
அரும்பி னாற்றனிக் கரும்பி னாற்றொடுத்
தடர்ந்து மேற்றெளித் - தமராடும்

அநங்க னார்க்கிளைத் தயர்ந்த ணாப்பியெத்
தரம்பை மார்க்கடைக் - கலமாகிக்

குரும்பை போற்பணைத் தரும்பு றாக்கொதித்
தெழுந்து கூற்றெனக் - கொலைசூழுங்

குயங்கள் வேட்டறத் தியங்கு தூர்த்தனைக்
குணங்க ளாக்கிநற் - கழல்சேராய்

பொருந்தி டார்ப்புரத் திலங்கை தீப்படத்
குரங்கி னாற்படைத் - தொருதேரிற்

புகுந்து நூற்றுவர்க் கொழிந்து பார்த்தனுக்
கிரங்கி யாற்புற் - தலைமேவிப்

பெருங்கு றோட்டைவிட் டுறங்கு காற்றெனப்
பிறங்க வேத்தியக் - குறுமாசூர்

பிறங்க லார்ப்பெழச் சலங்கள் கூப்பிடப்
பிளந்த வேற்கரப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 207

1209. அலமலமிப்புலால்
ராகம் -
தாளம் -
தனதன தத்தனாத் தனதன தத்தனாத்
தனதன தத்தனாத் - தனதான
பாடல்
அலமல மிப்புலாற் புலையுடல் கட்டனேற்
கறுமுக நித்தர்போற் - றியநாதா

அறிவிலி யிட்டுணாப் பொறியிலி சித்தமாயத்
தணிதரு முத்திவீட் - டணுகாதே

பலபல புத்தியாய்க் கலவியி லெய்த்திடாப்
பரிவொடு தத்தைமார்க் - கிதமாடும்

பகடிது டுக்கன்வாய்க் கறையனெ னத்தராப்
படியில்ம னித்தர்தூற் - றிடலாமோ

குலகிரி பொற்றலாய்க் குரைகடல் வற்றலாய்க்
கொடியஅ ரக்கரார்ப் - பெழவேதக்

குயவனை நெற்றியேற் றவனெதிர் குட்டினாற்
குடுமியை நெட்டைபோக் - கியவீரா

கலைதலை கெட்டபாய்ச் சமணரை நட்டகூர்க்
கழுநிரை முட்டஏற் - றியதாளக்

கவிதையும் வெற்றிவேற் கரமுடன் வற்றிடாக்
கருணையு மொப்பிலாப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 208

1210. அளக பாரமும்
ராகம் -
தாளம் -
தனன தான தந்த தந்த தனன தான தந்த தந்த
தனன தான தந்த தந்த - தனதான
பாடல்
அளக பார முங்கு லைந்து அரிய பார்வை யுஞ்சி வந்து
அணுகி யாக மும்மு யங்கி - யமுதூறல்

அதர பான மும்நு கர்ந்து அறிவு சோர வும்மொ ழிந்து
அவச மாக வும்பு ணர்ந்து - மடவாரைப்

பளக னாவி யுந்த ளர்ந்து பதறு மாக மும்ப யந்து
பகலி ராவை யும்ம றந்து - திரியாமற்

பரம ஞான முந்தெ ளிந்து பரிவு நேச முங்கி ளர்ந்து
பகரு மாறு செம்ப தங்கள் - தரவேணும்

துளப மாய னுஞ்சி றந்த கமல வேத னும்பு கழ்ந்து
தொழுது தேட ரும்ப்ர சண்ட - னருள்பாலா

சுரர்கள் நாய கன்ப யந்த திருவை மாம ணம்பு ணர்ந்து
சுடரு மோக னம்மி குந்த - மயில்பாகா

களப மார்பு டன்த யங்கு குறவர் மாது டன்செ றிந்து
கலவி நாட கம்பொ ருந்தி - மகிழ்வோனே

கடிய பாத கந்த விர்ந்து கழலை நாடொ றுங்கி ளர்ந்து
கருது வார்ம னம்பு குந்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 209

மேலே செல்க

1211. ஆசார வீனனறிவிலி
ராகம் - ஹம்ஸவிநோதினி
தாளம் - அங்கதாளம் (6)
தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2, தகதிமி - 2
தானான தான தனதன தானான தான தனதன
தானான தான தனதன - தனதான
பாடல்
ஆசார வீன னறிவிலி கோபாப ராதி யவகுண
னாகாத நீச னநுசிதன் - விபரீதன்

ஆசாவி சார வெகுவித மோகாச ரீத பரவச
னாகாச நீர்ம ணனல்வளி - யுருமாறி

மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம்
வாயாத பாவி யிவனென - நினையாமல்

மாதாபி தாவி னருணல மாறாம காரி லெனையினி
மாஞான போத மருள்செய - நினைவாயே

வீசால வேலை சுவறிட மாசூரர் மார்பு தொளைபட
வேதாள ராசி பசிகெட - அறைகூறி

மேகார வார மென அதிர் போர்யாது தான ரெமபுர
மீதேற வேல்கொ டமர்செயு - மிளையோனே

கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை
கூறாம னீய அவனுகர் - தருசேடங்

கோதாமெ னாம லமுதுசெய் வேதாக மாதி முதல்தரு
கோலோக நாத குறமகள் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 210

1212. ஆசைகூர்
ராகம் - யமுனா கல்யாணி
தாளம் - ஆதி
தானனா தத்த தானனா தத்த
தானனா தத்த - தனதான
பாடல்
ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
மானபூ வைத்து - நடுவேயன்

பானநூ லிட்டு நாவிலே சித்ர
மாகவே கட்டி - யொருஞான

வாசம்வீ சிப்ர காசியா நிற்ப
மாசிலோர் புத்தி - யளிபாட

மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர
வாளபா தத்தி - லணிவேனோ

மூசுகா னத்து மீதுவாழ் முத்த
மூரல்வே டிச்சி - தனபார

மூழ்குநீ பப்ர தாபமார் பத்த
மூரிவே ழத்தின் - மயில்வாழ்வே

வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு
வேசவே தித்து - வருமாசூர்

வீழமோ திப்ப ராரைநா கத்து
வீரவேல் தொட்ட - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 211

1213. ஆசைக் கொளுத்தி
ராகம் -
தாளம் -
தானத் தனத்ததன தானத் தனத்ததன
தானத் தனத்ததன - தனதான
பாடல்
ஆசைக் கொளுத்திவெகு வாகப் பசப்பிவரு
மாடைப் பணத்தையெடெ - னுறவாடி

ஆரக் கழுத்துமுலை மார்பைக் குலுக்கிவிழி
யாடக் குலத்துமயில் - கிளிபோலப்

பேசிச் சிரித்துமயிர் கோதிக் குலைத்துமுடி
பேதைப் படுத்திமய - லிடுமாதர்

பீறற் சலத்துவழி நாறப் படுத்தியெனை
பீடைப் படுத்துமய - லொழியாதோ

தேசத் தடைத்துபிர காசித் தொலித்துவரி
சேடற் பிடுத்துதறு - மயில்வீரா

தேடித் துதித்தஅடி யார்சித்த முற்றருளு
சீர்பொற் பதத்தஅரி - மருகோனே

நேசப் படுத்தியிமை யோரைக் கெடுத்தமுழு
நீசற் கனத்தமுற - விடும்வேலா

நேசக் குறத்திமய லோடுற் பவித்தபொனி
நீர்பொற் புவிக்குள்மகிழ் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 212

1214. ஆசை நேச
ராகம் -
தாளம் -
தான தான தனத்தன தான தான தனத்தன
தான தான தனத்தன - தனதான
பாடல்
ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள்
ஆவி சோர வுருக்கிகள் - தெருமீதே

யாவ ரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர்
ஆல கால விழிச்சிகள் - மலைபோலு

மாசி லாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர்
வாரி யோதி முடிப்பவர் - ஒழியாமல்

வாயி லூற லளிப்பவர் நாளு நாளு மினுக்கிகள்
வாசல் தேடி நடப்பது - தவிர்வேனோ

ஓசை யான திரைக்கடல் ஏழு ஞால முமுற்றருள்
ஈச ரோடு றவுற்றவள் - உமையாயி

யோகி ஞானி பரப்ரமி நீலி நார ணியத்தமி
ஓல மான மறைச்சிசொல் - அபிராமி

ஏசி லாத மலைக்கொடி தாய்ம னோம ணிசற்குணி
ஈறி லாத மலைக்கொடி - அருள்பாலா

ஏறு மேனி யொருத்தனும் வேத னான சமர்த்தனும்
ஈச னோடு ப்ரியப்படு - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 213

1215. ஆலமேற்ற
ராகம் -
தாளம் -
தான தாத்த தனதன தான தாத்த தனதன
தான தாத்த தனதன - தனதான
பாடல்
ஆல மேற்ற விழியினர் சால நீட்டி யழுதழு
தாக மாய்க்க முறைமுறை - பறைமோதி

ஆடல் பார்க்க நிலையெழு பாடை கூட்டி விரையம
யான மேற்றி யுறவின - ரயலாகக்

கால மாச்சு வருகென ஓலை காட்டி யமபடர்
காவ லாக்கி யுயிரது - கொடுபோமுன்

காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழலிணை
காத லாற்க ருதுமுணர் - தருவாயே

வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண
வியாழ கோத்ர மருவிய - முருகோனே

வேடர் நாட்டில் விளைபுன ஏனல் காத்த சிறுமியை
வேட மாற்றி வழிபடு - மிளையோனே

ஞால மேத்தி வழிபடு மாறு பேர்க்கு மகவென
நாணல் பூத்த படுகையில் - வருவோனே

நாத போற்றி யெனமுது தாதை கேட்க அநுபவ
ஞான வார்த்தை யருளிய - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 214

1216. ஆலுமயில்
ராகம் -
தாளம் -
தானதன தானத்த தானதன தானத்த
தானதன தானத்த - தனதான
பாடல்
ஆலுமயில் போலுற்ற தோகையர்க ளேமெத்த
ஆரவட மேலிட்ட - முலைமீதே

ஆனதுகி லேயிட்டு வீதிதனி லேநிற்க
ஆமவரை யேசற்று - முலையாதே

வேலுமழ கார்கொற்ற நீலமயில் மேலுற்று
வீறுமுன தார்பத்ம - முகமாறு

மேவியிரு பாகத்தும் வாழுமனை மார்தக்க
மேதகவு நானித்த - முரையேனோ

நாலுமுக வேதற்கு மாலிகையில் மாலுக்கு
நாடவரி யார்பெற்ற - வொருபாலா

நாணமுடை யாள்வெற்றி வேடர்குல மீதொக்க
நாடுகுயில் பார்மிக்க - எழில்மாது

வேலைவிழி வேடச்சி யார்கணவ னேமத்த
வேழமுக வோனுக்கு - மிளையோனே

வீரமுட னேயுற்ற சூரனணி மார்பத்து
வேலைமிக வேவிட்ட - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 215

1217. இடையித்தனை
ராகம் -
தாளம் -
தனனத்தன தனனத்தன தனனத்தன - தனதான
பாடல்
இடையித்தனை யுளதத்தைய ரிதழ்துய்த்தவ - ரநுபோகம்

இளகிக்கரை புரளப்புள கிதகற்புர - தனபாரம்

உடன்மற்கடை படுதுற்குண மறநிற்குண - வுணர்வாலே

ஒருநிஷ்கள வடிவிற்புக வொருசற்றருள் - புரிவாயே

திடமற்றொளிர் நளினப்ரம சிறைபுக்கன - னெனவேகுந்

தெதிபட்சண க்ருதபட்சண செகபட்சண - னெனவோதும்

விடபட்சணர் திருமைத்துனன் வெருவச்சுரர் - பகைமேல்வேல்

விடுவிக்ரம கிரியெட்டையும் விழவெட்டிய - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 216

1218. இருகுழை
ராகம் -
தாளம் -
தனதன தான தானன தனதன தான தான
தனதன தான தானன - தனதான
பாடல்
இருகுழை மீது தாவடி யிடுவன வோதி நீழலி
னிடமது லாவி மீள்வன - நுதல்தாவி

இழிவன காம வேதமு மொழிவன தாரை வேலென
எறிவன காள கூடமு - மமுதாகக்

கருகிய நீல லோசன அபிநய மாத ரார்தரு
கலவியில் மூழ்கி வாடிய - தமியேனுங்

கதிபெற ஈட றாதன பதிபசு பாச மானவை
கசடற வேறு வேறுசெய் - தருள்வாயே

ஒருபது பார மோலியு மிருபது வாகு மேருவு
முததியில் வீழ வானர - முடனேசென்

றொருகணை யேவு ராகவன் மருகவி பூதி பூஷணர்
உணருப தேச தேசிக - வரையேனற்

பரவிய கான வேடுவர் தருமபி ராம நாயகி
பரிபுர பாத சேகர - சுரராஜன்

பதிகுடி யேற வேல்தொடு முருகம யூர வாகன
பரவச ஞான யோகிகள் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 217

1219. இருநோய்
ராகம் - சிந்துபைரவி
தாளம் - அங்கதாளம் (5)
தக - 1, தகிட - 1 1/2, தகிட - 1 1/2, தக - 1
தனனா தனத்ததன தானன தனத்ததன
தனனா தனத்ததன - தனதான
பாடல்
இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை
யினிதாவ ழைத்தெனது - முடிமேலே

இணைதாள ளித்துனது மயில்மேலி ருத்தியொளி
ரியல்வேல ளித்துமகி - ழிருவோரும்

ஒருவாகெ னக்கயிலை யிறைபோன ளித்தருளு
மொளிர்வேத கற்பகந - லிளையோனே

ஒளிர்மாம றைத்தொகுதி சுரர்பார்து தித்தருள
உபதேசி கப்பதமு - மருள்வாயே

கருநோய றுத்தெனது மிடிதூள்ப டுத்திவிடு
கரிமாமு கக்கடவு - ளடியார்கள்

கருதாவ கைக்குவர மருள்ஞான தொப்பைமகிழ்
கருணாக டப்பமல - ரணிவோனே

திருமால ளித்தருளு மொருஞான பத்தினியை
திகழ்மார்பு றத்தழுவு - மயில்வேலா

சிலைதூளெ ழுப்பிகவ டவுணோரை வெட்டிசுரர்
சிறைமீள விட்டபுகழ் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 218

1220. இனமறைவி
ராகம் - பூபாளம்
தாளம் - அங்கதாளம் (5)
தக- 1, தகிட - 1 1/2, தகிட - 1 1/2, தக - 1
தனதனன தந்தனம் தனதனன தந்தனம்
தனதனன தந்தனம் - தந்ததான
பாடல்
இனமறைவி தங்கள்கொஞ் சியசிறுச தங்கைகிண்
கிணியிலகு தண்டையம் - புண்டரீகம்

எனதுமன பங்கயங் குவளைகுர வம்புனைந்
திரவுபகல் சந்ததஞ் - சிந்தியாதோ

உனதருளை யன்றியிங் கொருதுணையு மின்றிநின்
றுளையுமொரு வஞ்சகன் - பஞ்சபூத

உடலதுசு மந்தலைந் துலகுதொறும் வந்துவந்
துழலுமது துன்புகண் - டன்புறாதோ

கனநிவத தந்தசங் க்ரமகவள துங்கவெங்
கடவிகட குஞ்சரந் - தங்கும்யானை

கடகசயி லம்பெறும் படியவுணர் துஞ்சமுன்
கனககிரி சம்பெழுந் - தம்புராசி

அனலெழமு னிந்தசங் க்ரமமதலை கந்தனென்
றரனுமுமை யும்புகழ்ந் - தன்புகூர

அகிலபுவ னங்களுஞ் சுரரொடுதி ரண்டுநின்
றரிபிரமர் கும்பிடுந் - தம்பிரானே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 219

மேலே செல்க

1221. ஊனேறெலும்பு
ராகம் - சங்கராபரணம்
தாளம் - ஆதி
தானா தனந்த தானா தனந்த
தானா தனந்த - தனதான
பாடல்
ஊனே றெலும்பு சீசீ மலங்க
ளோடே நரம்பு - கசுமாலம்

ஊழ்நோ யடைந்து மாசான மண்டு
மூனோ டுழன்ற - கடைநாயேன்

நானா ரொடுங்க நானார் வணங்க
நானார் மகிழ்ந்து - உனையோத

நானா ரிரங்க நானா ருணங்க
நானார் நடந்து - விழநானார்

தானே புணர்ந்து தானே யறிந்து
தானே மகிழ்ந்து - அருளூறித்

தாய்போல் பரிந்த தேனோ டுகந்து
தானே தழைந்து - சிவமாகித்

தானே வளர்ந்து தானே யிருந்த
தார்வேணி யெந்தை - யருள்பாலா

சாலோக தொண்டர் சாமீப தொண்டர்
சாரூப தொண்டர் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 220

1222. எதிரொருவார
ராகம் - ஹம்ஸாநந்தி
தாளம் - அங்கதாளம் (18 1/2)
தகதகிட - 2 1/2, தகதகிட - 2 1/2, தகதகிட - 2 1/2
தகதகிட - 2 1/2, தகதகிட - 2 1/2, தகதகிட - 2 1/2
தகிட - 1 1/2, தகதிகி - 2
தனதனன தனதனன தனதனன தனதனன
தத்தத்த தத்தான - தந்ததான
பாடல்
எதிரொருவ ரிலையுலகி லென அலகு சிலுகுவிரு
திட்டுக்ரி யைக்கேயெ - ழுந்துபாரின்

இடையுழல்வ சுழலுவன சமயவித - சகலகலை
யெட்டெட்டு மெட்டாத - மந்த்ரவாளால்

விதிவழியி னுயிர்கவர வருகொடிய யமபடரை
வெட்டித் துணித்தாண்மை - கொண்டுநீபம்

விளவினிள இலைதளவு குவளைகமழ் பவளநிற
வெட்சித் திருத்தாள்வ - ணங்குவேனோ

திதிபுதல்வ ரொடுபொருது குருதிநதி முழுகியொளிர்
செக்கச் செவத்தேறு - செங்கைவேலா

சிகரகிரி தகரவிடு முருவமர கதகலப
சித்ரக் ககத்தேறு - மெம்பிரானே

முதியபதி னொருவிடையர் முடுகுவன பரிககன
முட்டச் செலுத்தாறி - ரண்டுதேரர்

மொழியுமிரு அசுவினிக ளிருசதுவி தவசுவெனு
முப்பத்து முத்தேவர் - தம்பிரானே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 221

1223. எழுந்திடுங்கப்பு
ராகம் -
தாளம் -
தனந்தனந் தத்தத் தனந்தனந் தத்தத்
தனந்தனந் தத்தத் - தனதானம்
பாடல்
எழுந்திடுங் கப்புச் செழுங்குரும் பைக்கொத்
திரண்டுகண் பட்டிட் - டிளையோர்நெஞ்

சிசைந்திசைந் தெட்டிக் கசிந்தசைந் திட்டிட்
டிணங்குபொன் செப்புத் - தனமாதர்

அழுங்கலங் கத்துக் குழைந்துமன் பற்றுற்
றணைந்துபின் பற்றற் - றகல்மாயத்

தழுங்குநெஞ் சுற்றுப் புழுங்குபுண் பட்டிட்
டலைந்தலைந் தெய்த்திட் - டுழல்வேனோ

பழம்பெருந் தித்திப் புறுங்கரும் பப்பத்
துடன்பெருங் கைக்குட் - படவாரிப்

பரந்தெழுந் தொப்பைக் கருந்திமுன் பத்தர்க்
கிதஞ்செய்தொன் றத்திக் - கிளையோனே

தழைந்தெழுந் தொத்துத் தடங்கைகொண் டப்பிச்
சலம்பிளந் தெற்றிப் - பொருசூரத்

தடம்பெருங் கொக்கைத் தொடர்ந்திடம் புக்குத்
தடிந்திடுஞ் சொக்கப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 222

1224. ஏட்டிலேவரை
ராகம் - காவடிச் சிந்து
தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிட - 1 1/2, தகதிமி - 2
தாத்த தானன தாத்த தானன
தாத்த தானன - தந்ததான
பாடல்
ஏட்டி லேவரை பாட்டி லேசில
நீட்டி லேயினி - தென்றுதேடி

ஈட்டு மாபொருள் பாத்து ணாதிக
லேற்ற மானகு - லங்கள்பேசிக்

காட்டி லேயியல் நாட்டி லேபயில்
வீட்டி லேஉல - கங்களேசக்

காக்கை நாய்நரி பேய்க்கு ழாமுண
யாக்கை மாய்வதொ - ழிந்திடாதோ

கோட்டு மாயிர நாட்ட னாடுறை
கோட்டு வாலிப - மங்கைகோவே

கோத்த வேலையி லார்த்த சூர்பொரு
வேற்சி காவள - கொங்கில்வேளே

பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர்
பூட்கை சேர்குற - மங்கைபாகா

பூத்த மாமலர் சாத்தி யேகழல்
போற்று தேவர்கள் - தம்பிரானே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 223

1225. கச்சுப்பூட்டு
ராகம் -
தாளம் -
தத்தத் தாத்த தத்தத் தாத்த
தத்தத் தாத்த - தனதான
பாடல்
கச்சுப் பூட்டு கைச்சக் கோட்ட
கத்திற் கோட்டு - கிரியாலங்

கக்கித் தேக்கு செக்கர்ப் போர்க்க
யற்கட் கூற்றில் - மயலாகி

அச்சக் கூச்ச மற்றுக் கேட்ட
வர்க்குத் தூர்த்த - னெனநாளும்

அத்தப் பேற்றி லிச்சிப் பார்க்க
றப்பித் தாய்த்தி - ரியலாமோ

பச்சைக் கூத்தர் மெச்சிச் சேத்த
பத்மக் கூட்டி - லுறைவோரி

பத்திற் சேர்ப்பல் சக்கிற் கூட்டர்
பத்தக் கூட்ட - ரியல்வானம்

மெச்சிப் போற்ற வெற்புத் தோற்று
வெட்கக் கோத்த - கடல்மீதே

மெத்தக் காய்த்த கொக்குக் கோட்டை
வெட்டிச் சாய்த்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 224

1226. கடலினும்
ராகம் -
தாளம் -
தனதனந் தனதனன தனதனந் தனதனன
தனதனந் தனதனன - தனதான
பாடல்
கடலினும் பெரியவிழி மலையினும் பெரியமுலை
கவரினுந்ட துவரதர - மிருதோள்பைங்

கழையினுங் குழையுமென மொழிபழங் கிளவிபல
களவுகொண் டொருவர்மிசை - கவிபாடி

அடலசஞ் சலனதுல னநுபமன் குணதரன்மெய்
அருள்பரங் குரனபய - னெனஆசித்

தலமரும் பிறவியினி யலமலம் பிறவியற
அருணபங் கயசரண - மருள்வாயே

வடநெடுங் குலரசத கிரியினின் றிருகலுழி
மகிதலம் புகவழியு - மதுபோல

மதசலஞ் சலசலென முதுசலஞ் சலதிநதி
வழிவிடும் படிபெருகு - முதுபாகை

உகடையசங் க்ரமகவள தவளசிந் துரதிலக
னுலகுமிந் திரனுநிலை - பெறவேல்கொண்

டுததிவெந் தபயமிட மலையொருங் கொலையவுண
ருடனுடன் றமர்பொருத - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 225

1227. கட்டக் கணப்பறைகள்
ராகம் -
தாளம் -
தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன
தத்தத் தனத்த - தனதான
பாடல்
கட்டக் கணப்பறைகள் கொட்டக் குலத்திளைஞர்
கட்டிப் புறத்தி - லணைமீதே

கச்சுக் கிழித்ததுணி சுற்றிக் கிடத்தியெரி
கத்திக் கொளுத்தி - யனைவோரும்

சுட்டுக் குளித்துமனை புக்கிட் டிருப்பரிது
சுத்தப் பொயொப்ப - துயிர்வாழ்வு

துக்கப் பிறப்பகல மிக்கச் சிவத்ததொரு
சொர்க்கப் பதத்தை - யருள்வாயே

எட்டுக் குலச்சயில முட்டத் தொளைத்தமரர்
எய்ப்புத் தணித்த - கதிர்வேலா

எத்திக் குறத்தியிரு முத்தத் தனக்கிரியை
யெற்பொற் புயத்தி - லணைவோனே

வட்டக் கடப்பமலர் மட்டுற்ற செச்சைமலர்
வைத்துப் பணைத்த - மணிமார்பா

வட்டத் திரைக்கடலில் மட்டித் தெதிர்த்தவரை
வெட்டித் துணித்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 226

1228. கண்டுபோல்
ராகம் -
தாளம் -
தந்த தானன தந்த தானன
தந்த தானன - தனதான
பாடல்
கண்டு போல்மொழி வண்டு சேர்குழல்
கண்கள் சேல்மதி - முகம்வேய்தோள்

கண்டு பாவனை கொண்டு தோள்களி
லொண்டு காதலி - லிருகோடு

மண்டி மார்பினில் விண்ட தாமென
வந்த கூர்முலை - மடவார்தம்

வஞ்ச மாலதில் நெஞ்சு போய்மடி
கின்ற மாயம - தொழியாதோ

கொண்ட லார்குழல் கெண்டை போல்விழி
கொண்டு கோகில - மொழிகூறுங்

கொங்கை யாள்குற மங்கை வாழ்தரு
குன்றில் மால்கொடு - செலும்வேலா

வெண்டி மாமன மண்டு சூர்கடல்
வெம்ப மேதினி - தனில்மீளா

வென்று யாவையு மன்றி வேளையும்
வென்று மேவிய - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 227

1229. கப்பரை
ராகம் -
தாளம் -
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன - தனதான
பாடல்
கப்பரை கைக்கொள வைப்பவர் மைப்பயில்
கட்பயி லிட்டிள - வளவோரைக்

கைக்குள்வ சப்பட பற்கறை யிட்டுமு
கத்தைமி னுக்கிவ - ருமுபாயப்

பப்பர மட்டைகள் பொட்டிடு நெற்றியர்
பற்றென வுற்றவொர் - தமியேனைப்

பத்மப தத்தினில் வைத்தருள் துய்த்திரை
பட்டதெ னக்கினி - யமையாதோ

குப்பர வப்படு பட்சமி குத்துள
முத்தரை யர்க்கொரு - மகவாகிக்

குத்திர மற்றுரை பற்றுணர் வற்றவொர்
குற்றம றுத்திடு - முதல்வோனே

விப்ரமு னிக்குழை பெற்றகொ டிச்சிவி
சித்ரத னக்கிரி - மிசைதோயும்

விக்ரம மற்புய வெற்பினை யிட்டெழு
வெற்பைநெ ருக்கிய - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 228

1230. கலைக்கோட்டு
ராகம் -
தாளம் -
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய - தனதான
பாடல்
கலைகோட்டு வல்லி விலைகாட்டு வில்ல
ரிவைமார்க்கு மெய்யி - லவநூலின்

கலைகாட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல
கடுகாட்டி வெய்ய - அதிபாரக்

கொலைகோட்டு கள்ளி டறிவோர்க்கு முள்ள
முகையாக்கை நையு - முயிர்வாழக்

கொடிகோட்டு மல்லி குரவார்க்கொள் தொல்லை
மறைவாழ்த்து செய்ய - கழல்தாராய்

சிலைகோட்டு மள்ளர் தினைகாத்த கிள்ளை
முலைவேட்ட பிள்ளை - முருகோனே

திணிகோட்டு வெள்ளி மவனாட்டி லுள்ள
சிறைமீட்ட - தில்ல - மயில்வீரா

அலைகோட்டு வெள்ள மலைமாக்கள் விள்ள
மலைவீழ்த்த வல்ல - அயில்மோகா

அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 229

மேலே செல்க

1231. களவு கொண்டு
ராகம் -
தாளம் -
தனன தந்த தத்தான தனன தந்த தத்தான
தனன தந்த தத்தான - தனதான
பாடல்
களவு கொண்டு கைக்காசி னளவ றிந்து கர்ப்பூர
களப துங்க வித்தார - முலைமீதே

கலவி யின்பம் விற்பார்க ளவய வங்க ளைப்பாடு
கவிதெ ரிந்து கற்பார்கள் - சிலர்தாமே

உளநெ கிழ்ந்த சத்தான வுரைம றந்து சத்தான
உனையு ணர்ந்து கத்தூரி - மணநாறும்

உபய பங்க யத்தாளி லபய மென்று னைப்பாடி
யுருகி நெஞ்சு சற்றோதி - லிழிவாமோ

அளவில் வன்க விச்சேனை பரவ வந்த சுக்ரீவ
அரசு டன்க டற்றூளி - யெழவேபோய்

அடலி லங்கை சுட்டாடி நிசிச ரன்த சக்ரீவ
மறவொ ரம்பு தொட்டார்த - மருகோனே

வளரு மந்த ரச்சோலை மிசைசெ றிந்த முற்பாலை
வனசர் கொம்பி னைத்தேடி - யொருவேட

வடிவு கொண்டு பித்தாகி யுருகி வெந்த றக்கானில்
மறவர் குன்றி னிற்போன - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 230

1232. கள்ளமீன
ராகம் -
தாளம் -
தய்யனா தத்ததன தய்யனா தத்ததன
தய்யனா தத்ததன - தனதான
பாடல்
கள்ளமீ னச்சுறவு கொள்ளுமீ னற்பெரிய
கல்விவீ றக்கரிய - மனமாகுங்

கல்விடா துற்றதிசை சொல்விசா ரத்திசைய
மெய்கள்தோ ணிப்பிறவி - யலைவேலை

மெள்ளஏ றிக்குரவு வெள்ளிலார் வெட்சிதண
முல்லைவே ருற்பலமு - ளரிநீபம்

வில்லநீள் பொற்கனக வல்லிமே லிட்டுனது
சொல்லையோ திப்பணிவல - தொருநாளே

துள்ளுமா னித்தமுனி புள்ளிமான் வெற்புதவு
வள்ளிமா னுக்குமயல் - மொழிவோனே

தொல்வியா ளத்துவளர் செல்வர்யா கத்தரையன்
எல்லைகா ணற்கரியர் - குருநாதா

தெள்ளுநா தச்சுருதி வள்ளல்மோ லிப்புடைகொள்
செல்வனே முத்தமிணர் - பெருவாழ்வே

தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ
தெய்வயா னைக்கினிய - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 231

1233. கன்னியர்
ராகம் -
தாளம் -
தன்னன தனதன தன்னன தனதன
தன்னன தனதன - தனதான
பாடல்
கன்னியர் கடுவிட மன்னிய கயலன
கண்ணிலு மிருகன - தனமீதுங்

கன்மைகள் மருவிய மன்மத னுருவிலி
மென்மைகொ ளுருவிலு - மயலாகி

இன்னல்செய் குடிலுட னின்னமு முலகினி
லிந்நிலை பெறவிங - னுதியாதே

யெண்ணுமு னடியவர் நண்ணிய பதமிசை
யென்னையும் வழிபட - விடவேணும்

பொன்னவ மணிபயில் மன்னவ புனமற
மின்முலை தழுவிய - புயவீரா

புண்ணிய முளபல விண்ணவர் தொழுமுதல்
எண்மலை யொடுபொரு - கதிர்வேலா

தன்னிறை சடையிறை யென்முனி பரவரு
இன்னிசை யுறுதமிழ் - தெரிவோனே

தண்ணளி தருமொரு பன்னிரு விழிபயில்
சண்முக மழகிய - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 232

1234. கிஞ்சுகமென
ராகம் -
தாளம் -
தந்ததன தத்த தத்த தந்ததன தத்த தத்த
தந்ததன தத்த தத்த - தனதான
பாடல்
கிஞ்சுகமெ னச்சி வத்த தொண்டையள்மி கக்க றுத்த
கெண்டையள்பு னக்கொ டிச்சி - யதிபாரக்

கிம்புரிம ருப்பை யொத்த குங்குமமு லைக்கு றத்தி
கிங்கரனெ னப்ப டைத்த - பெயர்பேசா

நெஞ்சுருகி நெக்கு நெக்கு நின்றுதொழு நிர்க்கு ணத்தர்
நிந்தனையில் பத்தர் வெட்சி - மலர்தூவும்

நின்பதயு கப்ர சித்தி யென்பனவ குத்து ரைக்க
நின்பணித மிழ்த்ர யத்தை - யருள்வாயே

கஞ்சன்வர விட்ட துட்ட குஞ்சரம ருப்பொ சித்த
கங்கனும தித்தி கைக்க - மதம்வீசுங்

கந்தெறிக ளிற்று ரித் வென்றுதிரு நட்ட மிட்ட
கம்பனும திக்க வுக்ர - வடிவேல்கொண்

டஞ்சியஜ கத்ர யத்தை யஞ்சலென விக்ர மித்து
அன்பர்புக ழப்பொ ருப்பொ - டமராடி

அன்றவுண ரைக்க ளத்தில் வென்றுததி யைக்க லக்கி
அண்டர்சிறை வெட்டி விட்ட - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 233

1235. குடிமைமனை
ராகம் -
தாளம் -
தனதனன தாத்தன தனதனன தாத்தன
தனதனன தாத்தன - தனதான
பாடல்
குடிமைமனை யாட்டியும் அடிமையொடு கூட்டமும்
குலமுமிறு மாப்புமி - குதியான

கொடியபெரு வாழ்க்கையி லினியபொரு ளீட்டியெ
குருடுபடு மோட்டென - வுடல்வீழில்

அடைவுடைவி டாச்சிறு பழையதுணி போர்த்தியெ
அரிடசுடு காட்டிடை - யிடுகாயம்

அழியுமள வாட்டிலுன் அமலமலர் மாப்பத
அருணசர ணாஸ்பரம் - அருள்வாயே

அடியினொடு மாத்தரு மொளமொளமொ ளாச்சென
அலறிவிழ வேர்க்குல - மொடுசாய

அவுணர்படை தோற்பெழ அருவரைக ளார்ப்பெழ
அயிலலகு சேப்பெழ - மறைநாலும்

உடையமுனி யாட்பட முடுகவுணர் கீழப்பட
உயரமரர் மேற்பட - வடியாத

உததிகம ராப்பிள முதுகுலிச பார்த்திபன்
உலகுகுடி யேற்றிய - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 234

1236. குறைவதின்றி
ராகம் -
தாளம் -
தனன தந்த தத்த தனன தந்த தத்த
தனன தந்த தத்த - தனதான
பாடல்
குறைவ தின்றி மிக்க சலமெ லும்பு துற்ற
குடிலி லொன்றி நிற்கு - முயிர்மாயம்

குலைகு லைந்து தெர்ப்பை யிடைநி னைந்து நிற்ப
கொடிய கொண்ட லொத்த - வுருவாகி

மறலி வந்து துட்ட வினைகள் கொண்ட லைத்து
மரண மென்ற துக்க - மணுகாமுன்

மனமி டைஞ்ச லற்று னடிநி னைந்து நிற்க
மயிலில் வந்து முத்தி - தரவேணும்

அறுகு மிந்து மத்த மலையெ றிந்த அப்பு
மளிசி றந்த புட்ப - மதுசூடி

அருந டஞ்செ யப்ப ரருளி ரங்கு கைக்கு
அரிய இன்சொல் செப்பு - முருகோனே

சிறுகு லந்த னக்கு ளறிவு வந்து தித்த
சிறுமி தன்த னத்தை - யணைமார்பா

திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
சிறைதி றந்து விட்ட - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 235

1237. கோகனகமு
ராகம் -
தாளம் -
தான தனன தத்த தான தனன தத்த
தான தனன தத்த - தனதான
பாடல்
கோக னகமு கிழ்த்த போக புளகி தத்த
கோடு தலைகு லைத்த - முலையாலே

கூட வரவ ழைக்கு மாடு குழைய டர்த்த
நீடி யகுவ ளைக்கண் - மடமானார்

ஆக முறவ ணைத்து காசை யபக ரித்து
மீள விதழ்க டிப்ப - தறியாதே

ஆசை யதுகொ ளுத்து மால மதுகு டித்த
சேலில் பரித விப்ப - தினியேனோ

மாக நதிம திப்ர தாப மவுலி யர்க்கு
சாவி யதுவோ ரர்த்த - மொழிவோனே

வாகு வலைய சித்ர ஆறி ருபுய வெற்பில்
வாழ்வு பெருகு றத்தி - மணவாளா

வேக வுரக ரத்ந நாக சயன சக்ர
மேவி மரக தத்தின் - மருகோனே

வீசு திரைய லைத்த வேலை சுவற வெற்றி
வேலை யுருவ விட்ட - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 236

1238. சந்தம் புனைந்து
ராகம் - அமிர்த வர்ஷிணி
தாளம் - ஆதி
தந்தந் தனந்த தந்தந் தனந்த
தந்தந் தனந்த - தனதான
பாடல்
சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த
தண்கொங் கைவஞ்சி - மனையாளுந்

தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை
தங்கும் பதங்க - ளிளைஞோரும்

எந்தன் தனங்க ளென்றென்று நெஞ்சி
லென்றும் புகழ்ந்து - மிகவாழும்

இன்பங் களைந்து துன்பங்கள் மங்க
இன்றுன் பதங்கள் - தரவேணும்

கொந்தின் கடம்பு செந்தண் புயங்கள்
கொண்டங் குறிஞ்சி - யுறைவோனே

கொங்கின் புனஞ்செய் மின்கண்ட கந்த
குன்றம் பிளந்த - கதிர்வேலா

ஐந்திந் த்ரியங்கள் வென்றொன்று மன்பர்
அங்கம் பொருந்து - மழகோனே

அண்டந் தலங்க ளெங்குங் கலங்க
அன்றஞ் சலென்ற - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 237

1239. சலமல
ராகம் - குந்தலவராளி
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதிமிதகதிமி - 4, தகிட - 1 1/2
தனதன தனத்த தத்த தனதன தனத்த தத்த
தனதன தனத்த தத்த - தனதான
பாடல்
சலமல மசுத்த மிக்க தசைகுரு தியத்தி மொய்த்த
தடியுடல் தனக்கு ளுற்று - மிகுமாயம்

சகலமு மியற்றி மத்த மிகுமிரு தடக்கை யத்தி
தனிலுரு மிகுத்து மக்க - ளொடுதாரம்

கலனணி துகிற்கள் கற்பி னொடுகுல மனைத்து முற்றி
கருவரீ யவத்தி லுற்று - மகிழ்வாகிக்

கலைபல பிடித்து நித்த மலைபடு மநர்த்த முற்றி
கடுவினை தனக்குள் நிற்ப - தொழியாதோ

மலைமக ளிடத்து வைத்து மதிபுனல் சடைக்குள் வைத்து
மழுவனல் கரத்துள் வைத்து - மருவார்கள்

மடிவுற நினைத்து வெற்பை வரிசிலை யிடக்கை வைத்து
மறைதொழ நகைத்த அத்தர் - பெருவாழ்வே

பலதிசை நடுக்க முற்று நிலைகெட அடற்கை யுற்ற
படையது பொருப்பில் விட்ட - முருகோனே

பழுதறு தவத்தி லுற்று வழிமொழி யுரைத்த பத்தர்
பலருய அருட்கண் வைத்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 238

1240. சாங்கரி
ராகம் - வாசஸ்பதி
தாளம் - ஸங்கீர்ணசாபு (4 1/2)
தகதிமி - 2, தகிட - 1 1/2, தக - 1
தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன - தனதான
பாடல்
சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக
தாண்டவ மாடியவர் - வடிவான

சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர்
தாங்களு ஞானமுற - வடியேனுந்

தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு
தோன்றிய சோதியொடு - சிவயோகந்

தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொ
சோம்பினில் வாழும்வகை - அருளாதோ

வாங்குகை யானையென வீன்குலை வாழைவளர்
வான்பொழில் சூழும்வய - லயலேறி

மாங்கனி தேனொழுக வேங்கையில் மேலரிகள்
மாந்திய வாரணிய - மலைமீதிற்

பூங்கொடி போலுமிடை யேங்கிட வாரமணி
பூண்பன பாரியன - தனபாரப்

பூங்குற மாதினுட வாடியிருள்
பூம்பொழில் மேவிவளர் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 239

மேலே செல்க

1241. சிவஞான
ராகம் - கல்யாணி
தாளம் - கண்டசாபு (2 1/2)
தனதான தந்ததன தனதான தந்ததன
தனதான தந்ததன - தனதான
பாடல்
சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி
சிவபோக மன்பருக - அறியாமற்

செகமீது ழன்றுமல வடிவாயி ருந்துபொது
திகழ்மாதர் பின்செருமி - யழிவேனோ

தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு
தயவாய்ம கிழ்ந்துதினம் - விளையாடத்

தமியேன்ம லங்களிரு வினைநோயி டிந்தலற
ததிநாளும் வந்ததென்முன் - வரவேணும்

உவகாரி யன்பர்பணி கலியாணி யெந்தையிட
முறைநாய கங்கவுரி - சிவகாமி

ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது ளங்கனியை
யொருநாள்ப கிர்ந்தவுமை - யருள்பாலா

அவமேபி றந்தஎனை யிறவாம லன்பர்புகு
மமுதால யம்பதவி - யருள்வோனே

அழகாந கம்பொலியு மயிலாகு றிஞ்சிமகிழ்
அயிலாபு கழ்ந்தவர்கள் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 240

1242. சீறிட்டுலாவு
ராகம் -
தாளம் -
தானத்த தான தந்த தானத்த தான தந்த
தானத்த தான தந்த - தனதான
பாடல்
சீறிட்டு லாவு கண்கள் மாதர்க்கு நாள்ம ருண்டு
சேவித்து மாசை கொண்டு - முழல்வேனைச்

சீரிட்ட மாக நின்ற காசைக்கொ டாத பின்பு
சீரற்று வாழு மின்பம் - நலியாதே

ஆறெட்டு மாய்வி ரிந்து மாறெட்டு மாகி நின்று
மாருக்கு மேவி ளம்ப - அறியாதே

ஆகத்து ளேம கிழ்ந்த ஜோதிப்ர காச இன்பம்
ஆவிக்கு ளேது லங்கி - அருளாதோ

மாறிட்டு வான டுங்க மேலிட்டு மேல கண்டம்
வாய்விட்டு மாதி ரங்கள் - பிளவாக

வாள்தொட்டு நேர்ந டந்த சூர்வஜ்ர மார்பு நெஞ்சும்
வான்முட்ட வீறு செம்பொன் - வரையோடு

கூறிட்ட வேல பங்க வீரர்க்கு வீர கந்த
கோதற்ற வேடர் தங்கள் - புனம்வாழுங்

கோலப்பெண் வாகு கண்டு மாலுற்று வேளை கொண்டு
கூடிக்கு லாவு மண்டர் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 241

1243. சூதினுண
ராகம் - வாசஸ்பதி
தாளம் - கண்டசாபு (2 1/2)
தகிட - 1 1/2, தக - 1
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன - தனதான
பாடல்
சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென
தூசுவழ கானவடி - வதனாலே

சூதமுட னேருமென மாதர்நசை தேடுபொரு
ளாசைதமி லேசுழல - வருகாலன்

ஆதிவிதி யோடுபிற ழாதவகை தேடியென
தாவிதனை யேகுறுகி - வருபோது

ஆதிமுரு காதிமுரு காதிமுரு காஎனவு
மாதிமுரு காநினைவு - தருவாயே

ஓதமுகி லாடுகிரி யேறுபட வாழசுரர்
ஓலமிட வேயயில்கொ - டமராடீ

ஓநமசி வாயகுரு பாதமதி லேபணியும்
யோகமயி லாஅமலை - மகிழ்பாலா

நாதரகு ராமஅரி மாயன்மரு காபுவன
நாடுமடி யார்கள்மன - துறைவோனே

ஞானசுர வானைகண வாமுருக னேயமரர்
நாடுபெற வாழவருள் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 242

1244. செழுந்தாது
ராகம் - சுத்தசாவேரி
தாளம் -
தனந்தான தானான தனந்தான தானான
தனந்தான தானான - தனதான
பாடல்
செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடு
சிறந்தியாதி லூமாசை - யொழியாத

திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடி
செயுங்காய நோயாள - னரகேழில்

விழுந்தாழ வேமூழ்க இடுங்கலன் மேயாவி
விடுங்கால மேநாயென் - வினைபாவம்

விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞான
விளம்போசை யேபேசி - வரவேணும்

அழுங்கோடி தேவார்க ளமர்ந்தார வானீடி
அழன்றேகி மாசீத - நெடுவேலை

அதிர்ந்தோட வேகாலன் விழுந்தோட வேகூர
அலங்கார வேவேவு - முருகோனே

கொழுங்கானி லேமாதர் செழுஞ்சோலை யேகோடு
குருந்தேறு மால்மாயன் - மருகோனே

குறம்பாடு வார்சேரி புகுந்தாசை மாதோடு
குணங்கூடி யேவாழு - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 243

1245. தத்தனமுமடிமை
ராகம் - சுத்த சாவேரி
தாளம் - ஆதி
தத்த தனதனன தத்த தனதனன
தத்த தனதனன - தனதான
பாடல்
தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர்
தக்க மனையினமு - மனைவாழ்வுந்

தப்பு நிலைமையணு கைக்கு வரவிரகு
தைக்கு மயல்நினைவு - குறுகாமுன்

பத்தி யுடனுருகி நித்த முனதடிகள்
பற்று மருள்நினைவு - தருவாயே

பத்து முடியுருளு வித்த பகழியினர்
பச்சை நிறமுகிலின் - மருகோனே

அத்தி முகவனழ குற்ற பெழைவயிற
னப்ப மவரைபொரி - அவல்தேனும்

அப்பி யமுதுசெயு மொய்ப்ப னுதவஅட
விக்குள் மறமகளை - யணைவோனே

முத்தி தருமுதல்வர் முக்க ணிறைவரொடு
முற்று மறைமொழியை - மொழிவோனே

முட்ட வசுரர்கிளை கெட்டு முறியமுதல்
வெட்டி யமர்பொருத - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 244

1246. தலைவலய
ராகம் - பிலஹரி
தாளம் - அங்கதாளம் (5) (எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)
தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2, தக - 1
தனதனன தானனம் தனதனன தானனம்
தனதனன தானனம் - தனதான
பாடல்
தலைவலய போகமுஞ் சலனமிகு மோகமுந்
தவறுதரு காமமுங் - கனல்போலுந்

தணிவரிய கோபமுந் துணிவரிய - லோபமுஞ்
சமயவெகு ரூபமும் - பிறிதேதும்

அலமலமெ னாஎழுந் தவர்களநு பூதிகொண்
டறியுமொரு காரணந் - தனைநாடா

ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின்
றபரிமித மாய்விளம் - புவதோதான்

கலகஇரு பாணமுந் திலகவொ சாபமுங்
களபமொழி யாதகொங் - கையுமாகிக்

கவருமவ தாரமுங் கொடியபரி தாபமுங்
கருதியிது வேளையென் - றுகிராத

குலதிலக மானுடன் கலவிபுரி வாய்பொருங்
குலிசகர வாசவன் - திருநாடு

குடிபுகநி சாசரன் பொடிபடம கீதரன்
குலையநெடு வேல்விடும் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 245

1247. தவநெறி
ராகம் - ஆபோகி
தாளம் - சதுஸ்ர த்ருவம் (14) (எடுப்பு - 4/4/0/4)
தனதன தனதன தனதன தனதன தனதன - தனதான
பாடல்
தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய - பரபாதத்

தருமிகள் கருமிகள் வெகுவித சமயிக ளவரொடு - சருவாநின்

றவனிவ னுவனுட னவிளவ ளுவளது இதுவுது - வெனுமாறற்

றருவுரு வொழிதரு வுருவுடை யதுபதி தமியனு - முணர்வேனோ

குவலய முழுவதும் மதிர்பட வடகுவ டிடிபடி - வுரகேசன்

கொடுமுடி பலநெரி தரநெடு முதுகுரை கடல்புனல் - வறிதாகத்

துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசி - சரர்சேனை

துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 246

1248. திதலையுலாத்து
ராகம் - சுத்த சாவேரி
தாளம் - ஆதி
தனதன தாத்தனத் தனதன தாத்தனத்
தனதன தாத்தனத் - தனதான
பாடல்
திதலையு லாத்துபொற் களபம்வி டாப்புதுத்
த்ரிவிதக டாக்களிற் - றுரகோடு

சிகரம காப்ரபைக் குவடனெ வாய்த்துநற்
சுரர்குடி யேற்றிவிட் - டிளநீரை

மதனவி டாய்த்தனத் திளைஞரை வாட்செப்
பிணமுலை மாத்தவக் - கொடிபோல்வார்

வலையிலி ராப்பகற் பொழுதுகள் போக்குமற்
றெனையுனை வாழ்த்தவைத் - தருள்வாயே

சததள பார்த்திபற் கரிபுரு ஷோத்தமற்
கெரிகன லேற்றவற் - குணராதோர்

சகலச மார்த்தசத் தியவன சூக்ஷமுக்
கியபர மார்த்தமுற் - புகல்வோனே

கதிர்மணி நீர்க்கடற் சுழிபுகு ராக்ஷதக்
கலகப ராக்ரமக் - கதிர்வேலா

கருதிய பாட்டினிற் றலைதெரி மாக்ஷணக்
கவிஞரு சாத்துணைப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 247

1249. திரைவஞ்ச
ராகம் - நாட்டக்குறிஞ்சி
தாளம் - கண்டசாபு (2 1/2)
தனதந்த தனதனன தனதந்த தனதனன
தனதந்த தனதனன - தனதான
பாடல்
திரைவஞ்ச இருவினைகள் நரையங்க மலமழிய
சிவகங்கை தனில்முழுகி - விளையாடிச்

சிவம்வந்து குதிகொளக வடிவுன்றன் வடிவமென
திகழண்டர் முநிவர்கண - மயன்மாலும்

அரன்மைந்த னெனகளிறு முகனெம்பி யெனமகிழ்
அடியென்க ணளிபரவ - மயிலேறி

அயில்கொண்டு திருநடன மெனதந்தை யுடன்மருவி
அருமந்த பொருளையினி - யருள்வாயே

பரியென்ப நரிகள்தமை நடனங்கொ டொருவழுதி
பரிதுஞ்ச வருமதுரை - நடராஜன்

பழியஞ்சி யெனதருகி லுறைபுண்ட ரிகவடிவ
பவளஞ்சொ லுமைகொழுந - னருள்பாலா

இருள்வஞ்ச கிரியவுண ருடனெங்க ளிருவினையு
மெரியுண்டு பொடியஅயில் - விடுவோனே

எனதன்பி றைசயில மகிழ்வஞ்சி குறமகளொ
டெணுபஞ்ச ணையின்மருவு - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 248

1250. தீஊதை
ராகம் - சுத்த சாவேரி
தாளம் - ஆதி
தானான தாத்த தானான தாத்த
தானான தாத்த - தனதான
பாடல்
தீயூதை தாத்ரி பானீய மேற்ற
வானீதி யாற்றி - கழுமாசைச்

சேறூறு தோற்பை யானாக நோக்கு
மாமாயை தீர்க்க - அறியாதே

பேய்பூத மூத்த பாறோரி காக்கை
பீறாஇ ழாத்தி - னுடல்பேணிப்

பேயோன டாத்து கோமாளி வாழ்க்கை
போமாறு பேர்த்து - னடிதாராய்

வேயூறு சீர்க்கை வேல்வேடர் காட்டி
லேய்வாளை வேட்க - வுருமாறி

மீளாது வேட்கை மீதூர வாய்த்த
வேலோடு வேய்த்த - இளையோனே

மாயூர வேற்றின் மீதே புகாப்பொன்
மாமேரு வேர்ப்ப - றியமோதி

மாறான மாக்கள் நீறாக வோட்டி
வானாடு காத்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 249

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com