| |
|
| அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் |
| பழநி |
| 104. அகல்வினை |
ராகம் - தாளம் - |
தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தன - தனதான |
| பாடல் |
அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு
மறிவிலி வித்தா ரத்தன - மவிகார
அகில்கமழ் கத்தூ ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள
வருள்பவர் நட்பே கொட்புறு - மொருபோதன்
பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டிய
பரமம யச்சோ திச்சிவ - மயமாநின்
பழநித னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகு
ரவுபயில் நற்றாள் பற்றுவ - தொருநாளே
புகலிவ னப்பே றப்புகல் மதுரைமன் வெப்பா றத்திகழ்
பொடிகொடு புற்பாய் சுற்றிகள் - கழுவேறப்
பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கோ தைக்கிடை
புலவரில் நக்கீ ரர்க்குத - வியவேளே
இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள்
எழுபுவி துய்த்தார் மைத்துனர் - மதலாய்வென்
றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை
யெழுதிவ னத்தே யெற்றிய - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
1 |
| 105. அணிபட் டணுகி |
ராகம் - தாளம் - |
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் - தனதான |
| பாடல் |
அணிபட் டணுகித் திணிபட் டமனத்
தவர்விட் டவிழிக் - கணையாலும்
அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்
தவன்விட் டமலர்க் - கணையாலும்
பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற்
பெறுமக் குணமுற் - றுயிர்மாளும்
பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப்
பெறுதற் கருளைத் - தரவேணும்
கணிநற் சொருபத் தையெடுத் துமலைக்
கனியைக் கணியுற் - றிடுவோனே
கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக்
கருதிச் சிறைவைத் - திடுவோனே
பணியப் பணியப் பரமர்ப் பரவப்
பரிவுற் றொருசொற் - பகர்வோனே
பவளத் தவளக் கனகப் புரிசைப்
பழநிக் குமரப் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
2 |
| 106. அதல விதல |
ராகம் - தாளம் - |
தனன தனதனன தந்தத்த தந்ததன தனன தனதனன தந்தத்த தந்ததன தனன தனதனன தந்தத்த தந்ததன - தனதான |
| பாடல் |
அதல விதலமுத லந்தத்த லங்களென
அவனி யென அமரர் அண்டத்த கண்டமென
அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென - அங்கிபாநு
அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
அறையு மறையென அருந்தத்து வங்களென
அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு - சம்ப்ரதாயம்
உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி
ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி
லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை - வந்துநீமுன்
உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென
மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ்
உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை - நம்புவேனோ
ததத ததததத தந்தத்த தந்ததத
திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு - திந்திதோதி
சகக சககெணக தந்தத்த குங்கெணக
டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டண்டிடிடி
தகக தகதகக தந்தத்த தந்தகக - என்றுதாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக
அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு
பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண - துங்ககாளி
பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு
கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில்
பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் - தம்பிரானே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
3 |
| 107. அபகார நிந்தை |
ராகம் - சக்ரவாஹம் தாளம் -அங்கதாளம் (8) (எடுப்பு - 1/2 தள்ளி) தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2, தக - 1, தகதிமிதக - 3 |
| தனதான தந்தனத் - தனதான |
| பாடல் |
அபகார நிந்தைபட் - டுழலாதே
அறியாத வஞ்சரைக் - குறியாதே
உபதேச மந்திரப் - பொருளாலே
உனைநானி னைந்தருட் - பெறுவேனோ
இபமாமு கன்தனக் - கிளையோனே
இமவான்ம டந்தையுத் - தமிபாலா
ஜெபமாலை தந்தசற் - குருநாதா
திருவாவி னன்குடிப் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
4 |
| 108. அரிசன வாடை |
ராகம் - தாளம் - |
தனதன தானத் தான தனத்தத் தனதன தானத் தான தனத்தத் தனதன தானத் தான தனத்தத் - தனதான |
| பாடல் |
அரிசன வாடைச் சேர்வை குளித்துப்
பலவித கோலச் சோலை யுடுத்திட்
டலர்குழ லோதிக் கோதி முடித்துச் - சுருளோடே
அமர்பொரு காதுக் கோலை திருத்தித்
திருநுதல் நீவிப் பாளித பொட்டிட்
டகில்புழு காரச் சேறு தனத்திட் - டலர்வேளின்
சுரத விநோதப் பார்வைமை யிட்டுத்
தருணக லாரத் தோடைத ரித்துத்
தொழிலிடு தோளுக் கேறவ ரித்திட் - டிளைஞோர்மார்
துறவினர் சோரச சோரந கைத்துப்
பொருள்கவர் மாதர்க் காசைய ளித்தற்
றுயரற வேபொற் பாதமெ னக்குத் - தருவாயே
கிரியலை வாரிச் சூரரி ரத்தப்
புணரியின் மூழ்கிக் கூளிக ளிக்கக்
கிரணவை வேல்புத் தேளிர்பி ழைக்கத் - தொடுவோனே
கெருவித கோலப் பாரத னத்துக்
குறமகள் பாதச் சேகர சொர்க்கக்
கிளிதெய்வ யானைக் கேபுய வெற்பைத் - தருவோனே
பரிமள நீபத் தாரொடு வெட்சித்
தொடைபுனை சேவற் கேதன துத்திப்
பணியகல் பீடத் தோகைம யிற்பொற் - பரியோனே
பனிமல ரோடைச் சேலுக ளித்துக்
ககனம ளாவிப் போய்வரு வெற்றிப்
பழநியில் வாழ்பொற் கோமள சத்திப் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
5 |
| 109. அருத்தி வாழ்வொடு |
ராகம் - பிலஹரி தாளம் - அங்கதாளம் (10 1/2) (எடுப்பு - அதீதம்) தகிட - 1 1/2, தகதிமி - 2, தகதிமி - 2, தகதிமி - 2, தகதிமிதக - 3 |
| தனத்த தானன தனதன தனதன - தனதான |
| பாடல் |
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு - முறவோரும்
அடுத்த பேர்களு மிதமுறு மகவோடு - வளநாடும்
தரித்த வூருமெ யெனமன நினைவது - நினையாதுன்
தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது - தருவாயே
எருத்தி லேறிய இறையவர் செவிபுக - வுபதேசம்
இசைத்த நாவின இதணுறு குறமக - ளிருபாதம்
பரித்த சேகர மகபதி தரவரு - தெய்வயானை
பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
6 |
| 110. அவனிதனிலே |
ராகம் - பௌளி தாளம் - அங்கதாளம் (5 1/2) (எடுப்பு - 1/2 தள்ளி) தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2, தகிட - 1 1/2 |
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த - தனதான |
| பாடல் |
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து - இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து - பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து - துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற - னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த - மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க - வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த - கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
7 |
| 111. அறமிலா நிலை |
ராகம் - தாளம் - |
தனதனா தனதத்த தனதனா தத்தத்த தனதனா தனதத்த - தனதான |
| பாடல் |
அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு
ளறிவுதா னறவைத்து - விலைபேசி
அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தை
யதிகமா வுதவிக்கை - வளையாலே
உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொ
ளுலையிலே மெழுகொத்த - மடவாரோ
டுருகியே வருபெற்றி மதனா டகபித்து
ஒழியுமா றொருமுத்தி - தரவேணும்
மறவர்மா தொருரத்ந விமலாகோ கநகத்தி
மயிலனாள் புணர்செச்சை - மணிபார்பா
மருள்நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்க
மயிலிலே றியவுக்ர - வடிவேலா
பறைகள்பே ணியருத்ரி கரியகா ரளகத்தி
பரமர்பா லுறைசத்தி - யெமதாயி
பழையபார் வதிகொற்றி பெரியநா யகிபெற்ற
பழநிமா மலையுற்ற - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
8 |
| 112. ஆதாளிகள் |
ராகம் - தாளம் - |
தானா தனதன தானா தனதன தானா தனதன - தனதான |
| பாடல் |
ஆதா ளிகள்புரி கோலா கலவிழி
யாலே யமுதெனு - மொழியாலே
ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடை
யாலே மணமலி - குழலாலே
சூதா ரிளமுலை யாலே யழகிய
தோடா ரிருகுழை - யதனாலே
சோரா மயல்தரு மானா ருறவிடர்
சூழா வகையருள் - புரிவாயே
போதா ரிருகழல் சூழா ததுதொழில்
பூணா தெதிருற - மதியாதே
போரா டியஅதி சூரா பொறுபொறு
போகா தெனஅடு - திறலோனே
வேதா வுடனெடு மாலா னவனறி
யாதா ரருளிய - குமரேசா
வீரா புரிவரு கோவே பழநியுள்
வேலா இமையவர் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
9 |
| 113. ஆலகாலமென |
ராகம் - தாளம் - |
தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன - தனதான |
| பாடல் |
ஆல காலமெ னக்கொலை முற்றிய
வேல தாமென மிக்கவி ழிக்கடை
யாலு மோகம்வி ளைத்துவி தத்துட - னிளைஞோரை
ஆர வாணைமெ யிட்டும றித்துவி
கார மோகமெ ழுப்பிய தற்குற
வான பேரைய கப்படு வித்ததி - விதமாகச்
சால மாலைய ளித்தவர் கைப்பொருள்
மாள வேசிலு கிட்டும ருட்டியெ
சாதி பேதம றத்தழு வித்திரி - மடமாதர்
தாக போகமொ ழித்துஉ னக்கடி
யானென் வேள்விமு கத்தவ முற்றிரு
தாளை நாளும்வ ழுத்திநி னைத்திட - அருள்வாயே
வால மாமதி மத்தமெ ருக்கறு
காறு பூளைத ரித்தச டைத்திரு
வால வாயன ளித்தரு ளற்புத - முருகோனே
மாய மானொட ரக்கரை வெற்றிகொள்
வாலி மார்புதொ ளைத்திட விற்கொடு
வாளி யேவிய மற்புய னச்சுதன் - மருகோனே
நாலு வேதந விற்றுமு றைப்பயில்
வீணை நாதனு ரைத்தவ னத்திடை
நாடி யோடிகு றத்தித னைக்கொடு - வருவோனே
நாளி கேரம்வ ருக்கைப ழுத்துதிர்
சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிரு
ஞான பூரண சத்தித ரித்தருள் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
10 |
மேலே செல்க
| 114. ஆறுமுகம் |
ராகம் - மோகனம் / நாட்டை குறிஞ்சி தாளம் - கண்டசாபு (2 1/2) |
தானதன தானதன தானதன தானதன தானதன தானதன - தந்ததான |
| பாடல் |
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் - என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய - தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன - தென்றுமோதும்
ஏழைகள் வியாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு - மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை - தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும - டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி - அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக - தம்பிரானே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
11 |
| 115. இத்தா ரணிக்குள் |
ராகம் - தாளம் - |
தத்தா தனத்ததன தத்தா தனத்ததன தானத் தனந்ததத் தானத் தனந்ததன - தனதனதான |
| பாடல் |
இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுத
கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்
தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்
ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை
யிச்சீர் பயிற்றவய தொட்டொடு மெட்டுவர
வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க - ளுடனுறவாகி
இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு
வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல
திக்கோடு திக்குவரை மட்டோடி மிக்கபொருள்
தேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுக
மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை
மூழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில - பிணியதுமூடிச்
சத்தான புத்தியது கெட்டே கிடக்கநம
னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது
பெற்றோர்கள் சுற்றியழ வுற்றார்கள் மெத்தஅழ
ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர்
தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி
னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென - எடுமெனவோடிச்
சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை
யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய
இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி
நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது
சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை
பேசிப் பணிந்துருகு நேசத்தை யின்றுதர - இனிவரவேணும்
தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
தாதத் தனந்ததன தானத் தனந்ததன
செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
தாதத்த செந்திகுத தீதத்த செந்தரிக
தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென - ஒருமயிலேறித்
திட்டே ரதத்தசுரர் பட்டே விழப்பொருது
வேலைத் தொளைந்துவரை யேழைப் பிளந்துவரு
சித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலை
மீதிற் புணர்ந்துசுக லீலைக் கதம்பமணி
சுத்தா வுமைக்குமொரு முத்தாய் முளைத்தகுரு
நாதக் குழந்தையென வோடிக் கடம்பமலர் - அணிதிருமார்பா
மத்தா மதக்களிறு பிற்றா னுதித்தகு
னேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு
முட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக
ளேதொட்ட கொண்டலுரு வாகிச் சுமந்ததிக
மட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவை
மார்பிற் புணர்ந்தரகு ராமற்கு மன்புடைய - மருமகனாகி
வற்றா மதுக்கருணை யுற்றே மறைக்கலைக
ளோதித் தெரிந்துதமிழ் சோதித் தலங்கலணி
யத்தா பரத்தையறி வித்தாவி சுற்றுமொளி
யாகிப் ப்ரபந்தமணி வேல்தொட்ட மைந்தபுய
வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி
வாழவுக் குகந்தடிய ராவிக்குள் நின்றுலவி - வருபெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
12 |
| 116. இரவியென |
ராகம் - தாளம் - |
தனதனன தனதனன தானான தனதனன தனதனன தனதனன தானான தனதனன தனதனன தனதனன தானான தனதனன - தனதான |
| பாடல் |
இரவியென வடவையென ஆலால விடமதென
உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர
இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி - லதுகூவ
எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி
யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென
இகல்புரிய மதனகுரு வோராத அனையர்கொடு - வசைபேச
அரஹரென வநிரைபடு பாடோத அரிதரிது
அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள்
அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக - மெலிவானாள்
அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது
அடிமைகொள வுனதுபரம் ஆறாத வொருதனிமை
யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை - வருவாயே
நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு
பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல்
நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன் - மருகோனே
நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி
கவுரிபயி ரவியரவ பூணாரி திரிபுவனி
நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை - யருள்பாலா
பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி
படஅமரர் துயரகல வேலேயி யமர்பொருத
பதுமகர தலமுருக நால்வேத கரரணிக - மயில்வீரா
பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை
வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர
பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
13 |
| 117. இருகனக மாமேரு |
ராகம் - தாளம் - |
தனதனன தானான தானதன தந்த தனதனன தானான தானதன தந்த தனதனன தானான தானதன தந்த - தனதான |
| பாடல் |
இருகனக மாமேரு வோகளப துங்க
கடகடின பாடீர வாரமுத கும்ப
மிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு - குவடேயோ
இலகுமல ரேவாளி யாகியஅ நங்க
னணிமகுட மோதானெ னாமிகவ ளர்ந்த
இளமுலைமி னார்மோக மாயையில்வி ழுந்து - தணியாமல்
பெருகியொரு காசேகொ டாதவரை யைந்து
தருவைநிக ரேயாக வேயெதிர்பு கழ்ந்து
பெரியதமி ழேபாடி நாடொறுமி ரந்து - நிலைகாணாப்
பிணியினக மேயான பாழுடலை நம்பி
உயிரையவ மாய்நாடி யேபவநி ரம்பு
பிறவிதனி லேபோக மீளவுமு ழன்று - திரிவேனோ
கருணையுமை மாதேவி காரணிய நந்த
சயனகளி கூராரி சோதரிபு ரந்த
கடவுளுடன் வாதாடு காளிமலை மங்கை - யருள்பாலா
கருடனுடன் வீறான கேதானம்வி ளங்கு
மதிரினொடு மாமாட மேடைகள்து லங்கு
கலிசைவரு காவேரி சேவகனொ டன்பு - புரிவோனே
பரவையிடை யேபாத காசுரர்வி ழுந்த
கதறியிட வேபாக சாதனனு நெஞ்சு
பலிதமென் வேயேக வேமயிலில் வந்த - குமரேசா
பலமலர்க ளேதூவி யாரணந வின்று
பரவியிமை யோர்சூழ நாடொறுமி சைந்து
பழநிமலை மீதோர்ப ராபரனி றைஞ்சு - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
14 |
| 118. இருசெப்பென |
ராகம் - தாளம் - |
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் - தனதான |
| பாடல் |
இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத்
திளகிப் புளகித் - திடுமாதர்
இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற்
றிறுகக் குறுகிக் - குழல்சோரத்
தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித்
தழுவிக் கடிசுற் - றணைமீதே
சருவிச் சருவிக் குனகித் தனகித்
தவமற் றுழலக் - கடவேனோ
அரிபுத் திரசித் தஜனுக் கருமைக்
குரியத் திருமைத் - துனவேளே
அடல்குக் குடநற் கொடிபெற் றெதிருற்
றசுரக் கிளையைப் - பொருவோனே
பரிவுற் றரனுக் கருணற் பொருளைப்
பயனுற் றறியப் - பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக் குமரப் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
15 |
| 119. இலகிய களப |
ராகம் - தாளம் - |
தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன - தனதான |
| பாடல் |
இலகிய களபசு கந்த வாடையின்
ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெ
இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை - யிதமாகக்
கலவியி லவரவர் தங்கள் வாய்தனி
லிடுபவர் பலபல சிந்தை மாதர்கள்
கசனையை விடுவது மெந்த நாளது - பகர்வாயே
சிலைதரு குறவர்ம டந்தை நாயிக
தினைவன மதனிலு கந்த நாயகி
திறள்தன மதனில ணைந்த நாயக - சிவலோகா
கொலைபுரி யசுரர்கு லங்கள் மாளவெ
அயிலயி லதனையு கந்த நாயக
குருபர பழநியி லென்று மேவிய - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
16 |
| 120. இலகு கனி மிஞ்சும் |
ராகம் - தாளம் - |
தனதனன தந்த தனதனன தந்த தனதனன தந்த - தனதான |
| பாடல் |
இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு
மிருவிழியெ னஞ்சு - முகமீதே
இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு
மிலகியக ரும்பு - மயலாலே
நிலவிலுடல் வெந்து கரியஅல மந்து
நெகிழுமுயிர் நொந்து - மதவேளால்
நிலையழியு நெஞ்சி லவர்குடிபு குந்த
நினைவொடுமி றந்து - படலாமோ
புலவினைய ளைந்து படுமணிக லந்து
புதுமலர ணிந்த - கதிர்வேலா
புழுகெழம ணந்த குறமகள்கு ரும்பை
பொரமுகையு டைந்த - தொடைமார்பா
பலநிறமி டைந்த விழுசிறைய லர்ந்த
பருமயில டைந்த - குகவீரா
பணைபணிசி றந்த தரளமணி சிந்து
பழநிமலை வந்த - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
17 |
| 121. உயிர்க்கூடு |
ராகம் - தாளம் - |
தனத்தான தனதனன தனத்தான தனதனன தனத்தான தனதனன - தனதான |
| பாடல் |
உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில்
ஒருக்காலு நெகிழ்வதிலை - யெனவேசூள்
உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவியம
துடைத்தாய்பின் வருகுமவ - ரெதிரேபோய்ப்
பயிற்பேசி யிரவுபகல் அவர்க்கான பதமைபல
படப்பேசி யுறுபொருள்கொள் - விலைமாதர்
படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவு
பதத்தாள மயிலின்மிசை - வரவேணும்
தயிர்ச்சோர னெனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள்
தரத்தாடல் புரியுமரி - மருகோனே
தமிழ்க்காழி மருதவன மறைக்காடு திருமருகல்
தநுக்கோடி வருகுழகர் - தருவாழ்வே
செயிற்சேல்வி ணுடுவினொடு பொரப்போய்வி மமர்பொருது
செயித்தோடி வருபழநி - யமர்வோனே
தினைக்காவல் புரியவல குறப்பாவை முலைதழுவு
திருத்தோள அமரர்பணி - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
18 |
| 122. உலகபசு |
ராகம் - ஸெளராஷ்டிரம் தாளம் - அங்கதாளம் (8 1/2) தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2, தகிட - 1 1/2 தகதிமிதக - 3 |
| தனதனன தான தந்த - தனதான |
| பாடல் |
உலகபசு பாச தொந்த - மதுவான
உறவுகிளை தாயர் தந்தை - மனைபாலர்
மலசலசு வாச சஞ்ச - லமதாலென்
மதிநிலைகெ டாம லுன்ற - னருள்தாராய்
சலமறுகு பூளை தும்பை - யணிசேயே
சரவணப வாமு குந்தன் - மருகோனே
பலகலைசி வாக மங்கள் - பயில்வோனே
பழநிமலை வாழ வந்த - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
19 |
| 123. ஒருபொழுதும் |
ராகம் - பேகடா தாளம் - அங்கதாளம் (11) தகதகிட - 2 1/2, தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2 தகிட - 1 1/2, தகதிமிதக - 3 |
| தனதனன தனதனன தானத் தானத் - தனதான |
| பாடல் |
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் - துணரேனே
உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் - தறியேனே
பெருபுவி லுயர்வரிய வார்வைத் தீரக் - குறியேனே
பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் - தவிரேனோ
துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் - பெருமாளே
தொழுதுவழி படுமடியர் காவற் காரப் - பெருமாளே
விருதுகவி விதரணவி நோதக் காரப் - பெருமாளே
விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
20 |
மேலே செல்க
| 124. ஒருவரை யொருவர் |
ராகம் - ஹிந்தோளம் தாளம் - அங்கதாளம் (5) (திஸ்ர ரூபகம்) தகதிமி - 2, தகிட - 1 1/2, தகிட - 1 1/2 |
தனதன தனன தான தனதன தனன தான தனதன தனன தான - தனதான |
| பாடல் |
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்
ஒருகுண வழியு றாத - பொறியாளர்
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி
உறநம னரகில் வீழ்வ - ரதுபோய்பின்
வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி
மறைவரி னனைய கோல - மதுவாக
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாத - மருள்வாயே
திரிபுர மெரிய வேழ சிலைமத னெரிய மூரல்
திருவிழி யருள்மெய்ஞ் ஞான - குருநாதன்
திருசரஸ் வதிய யேசு வரியிவர் தலைவ ரோத
திருநட மருளு நாத - னருள்பாலா
சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி
துகளெழ விடுமெய்ஞ் ஞான - அயிலோனே
சுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதி
தொழமுது பழநி மேவு - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
21 |
| 125. ஒடி யோடி |
ராகம் - தாளம் - |
தான தான தனத்தன தத்தன தான தான தனத்தன தத்தன தான தான தனத்தன தத்தன - தனதான |
| பாடல் |
ஓடி யோடி யழைத்துவ ரச்சில
சேடி மார்கள் பசப்பஅ தற்குமு
னோதி கோதி முடித்தவி லைச்சுரு - ளதுகோதி
நீடு வாச நிறைத்தஅ கிற்புழு
கோட மீது திமிர்த்தத னத்தினல்
நேச மாகி யணைத்தசி றுக்கிக - ளுறவாமோ
நாடி வாயும் வயற்றலை யிற்புன
லோடை மீதி னிலத்ததி வட்கையி
னாத கீத மலர்த்துளி பெற்றளி - யிசைபாடுங்
கோடு லாவி யமுத்துநி ரைத்தவை
காவுர் நாட தனிற்பழ நிப்பதி
கோதி லாத குறத்திய ணைத்தருள் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
22 |
| 126. கடலைச் சிறை |
ராகம் - தாளம் - |
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் - தனதான |
| பாடல் |
கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலிற்
ப்ரமரத் தையுடற் பொறியிட் டுமடுக்
கமலத் தைமலர்த் திவிடத் தையிரப் - பவனூணாக்
கருதிச் சருவிக் கயலைக் கயமுட்
படுவித் துழையைக் கவனத் தடைசிக்
கணையைக் கடைவித் துவடுத் தனையுப் - பினின்மேவி
அடலைச் செயல்சத் தியையக் கினியிற்
புகுவித் துயமப் ப்ரபுவைத் துகைவித்
தரிகட் கம்விதிர்த் துமுறித் துமதித் - தசகோரம்
அலறப் பணிரத் நமணிக் குழையைச்
சிலுகிட் டுமையிட் டொளிவிட் டுமருட்
டுதலுற் றபொறிச் சியர்கட் கடையிற் - படுவேனோ
சடிலத் தவனிட் டவிசிட் டகுலத்
தொருசெட் டியிடத் தினுதித் தருள்வித்
தகருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப் - பரிவாலே
சநகர்க் குமகஸ்த் யபுலஸ்த் யசநற்
குமரர்க் குமநுக் க்ரக மெய்ப் பலகைச்
சதுபத் துநவப் புலவர்க் கும்விபத் - தியில்ஞான
படலத் துறுலக் கணலக் யதமிழ்த்
த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப்
பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற் - குருநாதா
பவளக் கொடிசுற் றியபொற் கமுகிற்
றலையிற் குலையிற் பலமுத் துதிர்செய்ப்
பழநிப் பதிவெற் பினில்நிற் குமரப் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
23 |
| 127. கடலை பொரி |
ராகம் - தந்யாஸி தாளம் - ஆதி |
தனன தனதனன தனன தனதனன தனன தனதனன - தனதான |
| பாடல் |
கடலை பொரியவரை பலகனி கழைநுகர்
கடின குடவுதர - விபரீத
கரட தடமுமத நளின சிறுநயன
கரிணி முகவரது - துணைவோனே
வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில்
வலம்வரு மரகத - மயில்வீரா
மகபதி தருசுதை குறமினொ டிருவரு
மருவு சரசவித - மணவாளா
அடல சுரர்கள்குல முழுது மடியவுய
ரமரர் சிறையைவிட - எழில்மீறும்
அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு
மரகர சரவண - பவலோலா
படல வுடுபதியை யிதழி யணிசடில
பசுபதி வரநதி - அழகான
பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை
பழநி மலையில்வரு - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
24 |
| 128. கதியை விலக்கு |
ராகம் - தேஷ் தாளம் - அங்கதாளம் (5 1/2) தகதிமி - 2, தகிட - 1 1/2, தகதிமி - 2 |
தனன தனத்த தானன தனன தனத்த தானன தனன தனத்த தானன - தனதான |
| பாடல் |
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண
கனதன வெற்பு மேல்மிகு - மயலான
கவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகிய
கனதன மொத்த மேனியு - முகமாறும்
அதிபல வஜ்ர வாகும்வும் அயில்நுனை வெற்றி வேலதும்
அரவு பிடித்த தோகையு - முலகேழும்
அதிர வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்
அபிநவ பத்ம பாதமு - மறவேனே
இரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு
ரணமுக சுத்த வீரிய - குணமான
இளையவ னுக்கு நீண்முடி அரசது பெற்று வாழ்வுற
இதமொ டளித்த ராகவன் - மருகோனே
பதினொரு ருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை
பரிவோடு நிற்கு மீசுர - சுரலோக
பரிமள கற்ப காடவி அரியளி சுற்று பூவுதிர்
பழநி மலைக்குள் மேவிய - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
25 |
| 129. கரிய பெரிய |
ராகம் - மோஹனம் தாளம் - ஆதி (திஸ்ர நடை) (12) |
தனன தனன தனன தனன தனன தனன - தனதான |
| பாடல் |
கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய - திரிசூலன்
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி - யெழுகாலந்
திரியு நரியு மெரியு முரிமை
தெரிய விரவி - யணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் - தரவேணும்
பரிய வரையி னரிவை மருவு
பரம ரருளு - முருகோனே
பழன முழவர் கொழுவி லெழுது
பழைய பழநி - யமர்வோனே
அரியு மயனும் வெருவ வுருவ
அரிய கிரியை - யெறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடைய - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
26 |
| 130. கரிய மேகம் |
ராகம் - தாளம் - |
தனனத தானன தானன தானன தனனத தானன தானன தானன தனனத தானன தானன தானன - தனதான |
| பாடல் |
கரிய மேகம தோஇரு ளோகுழல்
அரிய பூரண மாமதி யோமுகம்
கணைகொ லோஅயில் வேலது வோவிழி - யிதழ்பாகோ
கமுகு தானிக ரோவளை யோகளம்
அரிய மாமல ரோதுளி ரோகரம்
கனக மேரது வோகுட மோமுலை - மொழிதேனோ
கருணை மால்துயி லாலிலை யோவயி
றிடைய தீரொரு நூலது வோவென
கனக மாமயில் போல்மட வாருடன் - மிகநாடி
கசட னாய்வய தாயொரு நூறுசெல்
வதனின் மேலென தாவியை நீயிரு
கமல மீதினி லேவர வேயருள் - புரிவாயே
திரிபு ராதிகள் நீறெழ வேமிக
மதனை யேவிழி யால்விழ வேசெயும்
சிவசொ ரூபம கேசுர னீடிய - தனயோனே
சினம தாய்வரு சூரர்கள் வேரற
அமரர் வானவர் வாடிடு தேவர்கள்
சிறைகள் மீளவு மேவடி வேல்விடு - முருகோனே
பரிவு சேர்கம லாலய சீதன
மருவு வார்திரு மாலரி நாரணர்
பழைய மாயவர் மாதவ னார்திரு - மருகோனே
பனக மாமணி தேவிக்ரு பாகரி
குமர னேபதி னாலுல கோர்புகழ்
பழநி மாமலை மீதினி லேயுறை - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
27 |
| 131. கரியிணை |
ராகம் - தாளம் - |
தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதனத் தானனத் - தனதான |
| பாடல் |
கரியிணை கோடெனத் தனமசைத் தாடிநற்
கயல்விழிப் பார்வையிற் - பொருள்பேசிக்
கலையிழுத் தேகுலுக் கெனநகைத் தேமயற்
கலதியிட் டேயழைத் - தணையூடே
செருமிவித் தாரசிற் றிடைதுடித் தாடமற்
றிறமளித் தேபொருட் - பறிமாதர்
செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச்
சிவபதபத் தேபதித் - தருள்வாயே
திரிபுரக் கோலவெற் பழல்கொளச் சீர்நகைச்
சிறிதருட் டேவருட் - புதல்வோனே
திரைகடற் கோவெனக் குவடுகட் டூள்படத்
திருடர்கெட் டோடவிட் - டிடும்வேலா
பரிமளப் பாகலிற் கனிகளைப் பீறிநற்
படியினிட் டேகுரக் - கினமாடும்
பழநியிற் சீருறப் புகழ்குறப் பாவையைப்
பரிவுறச் சேர்மணப் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
28 |
| 132. கருகி யகன்று |
ராகம் - தாளம் - |
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த - தனதான |
| பாடல் |
கருகி யகன்று வரிசெறி கண்கள்
கயல்நிக ரென்று - துதிபேசிக்
கலைசுரு ளொன்று மிடைபடு கின்ற
கடிவிட முண்டு - பலநாளும்
விரகுறு சண்ட வினையுடல் கொண்டு
விதிவழி நின்று - தளராதே
விரைகமழ் தொங்கல் மருவிய துங்க
விதபத மென்று - பெறுவேனோ
முருக கடம்ப குறமகள் பங்க
முறையென அண்டர் - முறைபேச
முதுதிரை யொன்ற வருதிறல் வஞ்ச
முரணகர் வென்ற - வடிவேலா
பரிமள இன்ப மரகத துங்க
பகடித வென்றி - மயில்வீரா
பறிதலை குண்டர் கழுநிரை கண்டு
பழநிய மர்ந்த - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
29 |
| 133. கருப்புவிலில் மருப்பகழி |
ராகம் - தாளம் - |
தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்தனா தனதன - தனதான |
| பாடல் |
கருப்புவிலில் மருப்பகழி தொடுத்து மதன் விடுத்தனைய
கடைக்கணொடு சிரித்தணுகு
கருத்தினால் விரகுசெய் - மடமாதர்
கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை
கனத்தவிரு தனத்தின்மிசை
கலக்குமோ கனமதில் - மருளாமே
ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி
யுனைப்புகழு மெனைப்புவியில்
ஒருத்தனாம் வகைதிரு - அருளாலே
உருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி யெனக்குறுகி
யுரைக்கமறை யடுத்து பொருள்
உணர்த்துநா ளடிமையு - முடையேனோ
பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு
படிக்கடலு மலைக்கவல
பருத்ததோ கையில்வரு - முருகோனே
பதித்தமர கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபல
பணிப்பனிரு புயச்சயில
பரக்கவே இயல்தெரி - வயலூரா
திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைகை
செயித்தருளு மிசைப்பிரிய
திருத்தமா தவர்புகழ் - குருநாதா
சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல்
திருப்பழநி மலைக்குளுறை
திருக்கைவே லழகிய - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
30 |
மேலே செல்க
| 134. கருவினுருவாகி |
ராகம் - விஜயநாகரி தாளம் - அங்கதாளம் (5 1/2) (எடுப்பு - 1/2 தள்ளி) தகதகிட - 2 1/2, தகிட 1 1/2, தகிட 1 1/2 |
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த - தனதான |
| பாடல் |
கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து - மதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்து - மிகவாடி
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
அறுசமய நீதி யொன்று - மறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அநுதினமு நாண மின்றி - யழிவேனோ
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
உலகளவு மால்ம கிழ்ந்த - மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரி லன்று - வருவோனே
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனரு ளால்வ ளர்ந்த - குமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
31 |
| 135. கலகவாள் விழி |
ராகம் - தாளம் - |
தனன தானன தானா தானா தனன தானன தானா தானா தனன தானன தானா தானா - தனதான |
| பாடல் |
கலக வாள்விழி வேலா சேலோ
மதுர வாய்மொழி தேனோ பாலோ
கரிய வார்குழல் காரோ கானோ - துவரோவாய்
களுமு நீள்கமு கோதோள் வேயோ
உதர மானது மாலேர் பாயோ
களப வார்முலை மேரோ கோடோ - இடைதானும்
இழைய தோமலர் வேதா வானோ
னெழுதி னானிலை யோவாய் பேசீ
ரிதென மோனமி னாரே பாரி - ரெனமாதர்
இருகண் மாயையி லேமூழ் காதே
யுனது காவிய நூலா ராய்வே
னிடர்ப டாதருள் வாழ்வே நீயே - தரவேணும்
அலைவி லாதுயர் வானோ ரானோர்
நிலைமை யேகுறி வேலா சீலா
அடியர் பாலரு ளீவாய் நீபார் - மணிமார்பா
அழகு லாவுவு சாகா வாகா
ரிபமி னாள்மகிழ் கேள்வா தாழ்வா
ரயலு லாவிய சீலா கோலா - கலவீரா
வலபை கேள்வர்வி னானாய் கானார்
குறவர் மாதும ணாளா நாளார்
வனச மேல்வரு தேவா மூவா - மயில்வாழ்வே
மதுர ஞானவி நோதா நாதா
பழநி மேவுகு மாரா தீரா
மயுர வாகன தேவா வானோர் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
32 |
| 136. கலகக் கயல்விழி |
ராகம் - தாளம் - |
தனனத் தனதன தானன தானன தனனத் தனதன தானன தானன தனனத் தனதன தானன தானன - தனதான |
| பாடல் |
கலகக் கயல்விழி போர்செய வேள்படை
நடுவிற் புடைவரு பாபிகள் கோபிகள்
கனியக் கனியவு மேமொழி பேசிய - விலைமாதர்
கலவித் தொழிலன மேயினி தாமென
மனமிப் படிதின மேயுழ லாவகை
கருணைப் படியெனை யாளவு மேயருள் - தரவேணும்
இலவுக் கிளையெனும் வாள்வளி நாயகி
குழையத் தழுவிய மேன்மையி னாலுயர்
இசைபெற் றருளிய காமுக னாகிய - வடிவோனே
இதமிக் கருமறை வேதிய ரானவர்
புகலத் தயவுட னேயருள் மேன்மைகள்
இசையத் தருமநு கூலவ சீகர - முதல்வோனே
நிலவைச் சடைமிசை யேபுனை காரணர்
செவியிற் பிரணவ மோதிய தேசிய
நிருதர்க் கொருபகை யாளியு மாகிய - சுடர்வேலா
நிமலக் குருபர ஆறிரு பார்வையும்
அருளைத் தரஅடி யார்தமை நாடொறும்
நிகரற் றவரென வேமகீர் கூர்தரு - முரியோனே
பலவிற் கனிபணை மீறிய மாமர
முருகிற் கனியுட னேநெடு வாளைகள்
பரவித் தனியுதிர் சோலைகள் மேவிய - வகையாலே
பழனத் துழவர்க ளேரிட வேவிளை
கழனிப் புரவுகள் போதவு மீறிய
பழநிச் சிவகிரி மீதினி லேவளர் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
33 |
| 137. கலவியி லிச்சி |
ராகம் - தாளம் - |
தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன - தந்ததான |
| பாடல் |
கலவியி லிச்சித் திரங்கி நின்றிரு
கனதனம் விற்கச் சமைந்த மங்கையர்
கயல்கள் சிவப்பப் பரிந்து நண்பொடு - மின்பமூறிக்
கனியித முற்றுற் றருந்தி யங்குறு
மவச மிகுத்துப் பொருந்தி யின்புறு
கலகம் விளைத்துக் கலந்து மண்டணை - யங்கமீதே
குலவிய நற்கைத் தலங்கொ டங்கணை
கொடியிடை மெத்தத் துவண்டு தண்புயல்
குழலள கக்கட் டவிழ்ந்து பண்டையி - லங்கம்வேறாய்க்
குறிதரு வட்டத் தடர்ந்த சிந்துர
முகதல முத்துப் பொலிந்தி லங்கிட
கொடிய மயற்செய்ப் பெருந்த டந்தனில் - மங்கலாமோ
இலகிய சித்ரப் புனந்த னிந்துறை
குறமகள் கச்சுக் கிடந்த கொங்கையி
னினிதுறு பத்மப் பதம்ப ணிந்தருள் - கந்தவேளே
எழுகடல் வற்றப் பெருங்கொ டுங்கிரி
யிடிபட மிக்கப் ப்ரசண்டம் விண்டுறு
மிகலர்ப தைக்கத் தடிந்தி லங்கிய - செங்கைவேலா
பலவித நற்கற் படர்ந்த சுந்தரி
பயில்தரு வெற்புத் தருஞ்செ ழுங்கொடி
பணைமுலை மெத்தப் பொதிந்து பண்புறு - கின்றபாலைப்
பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்
பகரனெ இச்சித் துகந்து கொண்டருள்
பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் - தம்பிரானே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
34 |
| 138. கலைகொடு பவுத்த |
ராகம் - தாளம் - |
தனதனன தத்த தான தனதனன தத்த தான தனதனன தத்த தான - தனதான |
| பாடல் |
கலைகொடுப வுத்தர் காம கருமிகள்து ருக்கர் மாய
கபிலர்பக ரக்க ணாதர் - உலகாயர்
கலகமிடு தர்க்கர் வாம பியரவர்வி ருத்த ரோடு
கலகலென மிக்க நூல்க - ளதனாலே
சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி
தெரிவரிய சித்தி யான - வுபதேசந்
தெரிதரவி ளக்கி ஞான தரிசநம ளித்து வீறு
திருவடியெ னக்கு நேர்வ - தொருநாளே
கொலையுறஎ திர்த்த கோர இபமுக அரக்க னோடு
குரகதமு கத்தர் சீய - முகவீரர்
குறையுடலெ டுத்து வீசி யலகையொடு பத்ர காளி
குலவியிட வெற்றி வேலை - விடுவோனே
பலமிகுபு னத்து லாவு குறவநிதை சித்ர பார
பரிமளத னத்தில் மேவு - மணிபார்பா
படைபொருது மிக்க யூக மழைமு கிலை யொட்டி யேறு
பழநிமலை யுற்ற தேவர் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
35 |
| 139. கலப முலை |
ராகம் - தாளம் - |
தனதனன தத்த தந்த தனதனன தத்த தந்த தனதனன தத்த தந்த - தனதான |
| பாடல் |
களபமுலை யைத்தி றந்து தளவ நகை யைக்கொ ணர்ந்து
கயலொடுப கைத்த கண்கள் - குழைதாவக்
கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழந்து
கடியிருளு டுக்கு லங்க - ளெனவீழ
முழுமதி யெனச்சி றந்த நகைமுக மினுக்கி யின்ப
முருகிதழ்சி வப்ப நின்று - விலைகூறி
முதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்து
முடுகுமவ ருக்கி ரங்கி - மெலிவேனோ
இளமதி கடுக்கை தும்பை அரவணி பவர்க்கி சைந்து
இனியபொரு ளைப்ப கர்ந்த - குருநாதா
இபமுகவ னுக்கு கந்த இளையவ மருக்க டம்ப
எனதுதலை யிற்ப தங்க - ளருள்வோனே
குழகென எடுத்து கந்த உமைமுலை பிடித்த ருந்து
குமரசிவ வெற்ப மர்ந்த - குகவேலா
குடிலொடு மிகச்செ றிந்த இதணுள புனத்தி ருந்த
குரவர்மக ளைப்பு ணர்ந்த - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
36 |
| 140. கறுத்த குழலணி |
ராகம் - தாளம் - |
தனத்த தனதன தனதன தந்தத் தனத்த தனதன தனதன தந்தத் தனத்த தனதன தனதன தந்தத் - தனதான |
| பாடல் |
கறுத்த குழலணி மலரணி பொங்கப்
பதிதத சிலை நுத லணிதில தம்பொற்
கணைக்கு நிகர்விழி சுழலெழு கஞ்சச் - சிரமான
கழுத்தி லுறுமணி வளைகுழை மின்னக்
குவட்டு முலையசை படஇடை யண்பைக்
கமைத்த கலையிறு குறுதுவள் வஞ்சிக் - கொடிபோலச்
சிறுத்த களமிகு மதமொழு கின்சொற்
குயிற்க ளெனமட மயிலெகி னங்கட்
டிருக்கு நடைபழ கிகள்கள் பங்கச் - சுடைமாதர்
திகைத்த தனமொடு பொருள்பறி யொண்கட்
குவட்டி யவர்வலை யழலுறு பங்கத்
திடக்கு தலைபுலை யவர்வழி யின்பைத் - தவிர்வேனோ
பறித்த விழிதலை மழுவுழை செங்கைச்
செழித்த சிவபர னிதழிநல் தும்பைப்
படித்த மதியற லரவணி சம்புக் - குருநாதா
பருத்த அசுரர்க ளுடன்மலை துஞ்சக்
கொதித்த அலைகட லெரிபட செம்பொற்
படைக்கை மணியயில் விடுநட னங்கொட் - கதிர்வேலா
தெறித்து விழியர வுடல்நிமி ரம்பொற்
குவட்டொ டிகைகிரி பொடிபட சண்டச்
சிறப்பு மயில்மிசை பவரிகொ ளும்பொற் - றிருபாதா
சிறக்கு மழகிய திருமகள் வஞ்சிக்
குறத்தி மகளுமை மருமகள் கொங்கைச்
சிலைக்கு ளணைகுக சிவமலை கந்தப் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
37 |
| 141. கனக கும்பமி |
ராகம் - தாளம் - |
தனன தந்தன தந்த தானன தனன தந்தன தந்த தானன தனன தந்தன தந்த தானன - தந்ததான |
| பாடல் |
கனக கும்பமி ரண்டு நேர்மலை
யெனநெ ருங்குகு ரும்பை மாமணி
கதிர்சி றந்தவ டங்கு லாவிய - முந்துசூதம்
கடையில் நின்றுப ரந்து நாடொறு
மிளகி விஞ்சியெ ழுந்த கோமள
களப குங்கும கொங்கை யானையை - யின்பமாக
அனைவ ருங்கொளு மென்று மேவிலை
யிடும டந்தையர் தங்கள் தோதக
மதின்ம ருண்டு துவண்ட வாசையில் - நைந்துபாயல்
அவச மன்கொளு மின்ப சாகர
முழுகும் வஞ்சக நெஞ்சை யேயொழி
தருப தங்கதி யெம்பி ரானருள் - தந்திடாயோ
தனத னந்தன தந்த னாவென
டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை
தகுதி திந்திகு திந்த தோவென - வுந்துதாளந்
தமர சஞ்சலி சஞ்ச லாவென
முழவு டுண்டுடு டுண்டு டூவென
தருண கிண்கிணி கிண்கி ணாரமு - முந்தவோதும்
பணிப தங்கய மெண்டி சாமுக
கரிய டங்கலு மண்ட கோளகை
பதறி நின்றிட நின்று தோதக - என்றுதோகை
பவுரி கொண்டிட மண்டி யேவரு
நிசிச ரன்கிளை கொன்ற வேலவ
பழநி யங்கிரி யின்கண் மேவிய - தம்பிரானே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
38 |
| 142. கனத்திறுகி |
ராகம் - தாளம் - |
தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் - தனதான |
| பாடல் |
கனத்திறுகிப் பெருத்திளகிப்
பணைத்துமணத் திதத்துமுகக்
கறுப்புமிகுத் தடர்த்துநிகர்த் - தலமேராய்
கவட்டையுமெத் தடக்கிமதர்த்
தறக்கெருவித் திதத்திடுநற்
கலைச்சவுளித் தலைக்குலவிக் - களிகூருந்
தனத்தியர்கட் கிதத்துமிகுத்
தனற்குண்மெழுக் கெனப்புவியிற்
றவித்திழிசொற் பவக்கடலுற் - றயர்வாலே
சலித்தவெறித் துடக்குமனத்
திடக்கனெனச் சிரிக்கமயற்
சலத்தின்வசைக் கிணக்கமுறக் - கடவேனோ
புனத்தின்மலைக் குறத்தியுயர்த்
திருக்குதனக் குடத்தினறைப்
புயத்தவநற் கருத்தையுடைக் - குகவீரா
பொருப்பரசற் கிரக்கமொடுற்
றாற்சடிலத் தவச்சிவனிற்
புலச்சிதனக் கிதத்தைமிகுத் - திடுநாதா
சினத்தெதிர்துட் டரக்கர்தமைத்
திகைத்துவிழக் கணப்பொழுதிற்
சிதைத்திடுநற் கதிர்க்கைபடைத் - துடையோனே
செருக்கொடுநற் றவக்கமலத்
தயற்குமரிக் கருட்புரிசைத்
திருப்பழநிக் கிரிக்குமரப் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
39 |
| 143. கனமாயெழுந்து |
ராகம் - தாளம் - |
தனனா தனந்தனத் தனனா தனந்தனத் தனனா தனந்தனத் - தனதான |
| பாடல் |
கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற்
புரமா ரணந்துளுத் - திடுமானார்
கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப்
பொருளே யிழந்துவிட் - டயர்வாயே
மனமே தளர்ந்துவிக் கலுமே யெழுந்துமட்
டறவே யுலந்துசுக் - கதுபோலே
வசமே யழிந்துவுக் கிடுநோய் துறந்துவைப்
பெனவே நினைந்துனைப் - புகழ்வேனோ
புனவே டர்தந்தபொற் குறமா துஇன்புறப்
புணர்கா தல்கொண்டஅக் - கிழவோனே
புனலே ழுமங்கவெற் பொடுசூர் சிரங்கள்பொட்
டெழவே லெறிந்தவுக் - கிரவீரா
தினமே வுகுங்குமப் புயவா சகிண்கிணிச்
சிறுகீ தசெம்பதத் - தருளாளா
சிவலோ கசங்கரிக் கிறைபால பைங்கயத்
திருவா வினன்குடிப் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
40 |
nkny bry;f
| 144. கார ணிந்தவரை |
ராகம் - தாளம் - |
தான தந்ததனத் தான தந்ததனத் தான தந்ததனத் - தனதான |
| பாடல் |
கார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக்
காதல் நெஞ்சயரத் - தடுமாறிக்
கான ரமபுதிரத் தோல்வ ழும்புறுபொய்க்
காய மொன்றுபொறுத் - தடியேனும்
தாரி ணங்குகுழற் கூர ணிந்தவிழிச்
சாப மொன்றுநுதற் - கொடியார்தம்
தாள்ப ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத்
தாழ்வ டைந்துலையத் - தகுமோதான்
சூர னங்கம்விழத் தேவர் நின்றுதொழத்
தோய முஞ்சுவறப் - பொரும்வேலா
தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச்
சூழ்பெ ருங்கிரியிற் - றிரிவோனே
ஆர ணன்கருடக் கேத னன்தொழமுற்
றால முண்டவருக் - குரியோனே
ஆலை யும்பழனச் சோலை யும்புடைசுற்
றாவி னன்குடியிற் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
41 |
| 145. குரம்பை மலசலம் |
ராகம் - கௌளை தாளம் - ஆதி - 2 களை (16) |
தனந்த தனதன தனதன தனதன தனந்த தனதன தனதன தனதன தனந்த தனதன தனதன தனதன - தனதான |
| பாடல் |
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல - கசுமாலக்
குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர்
இடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள்
குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை - விறலான
சரம்ப ருறவனை நரகனை துரகனை
இரங்கு கலியனை பரிவுறு சடலனை
சவுந்த ரிகமுக சரவண பதமொடு - மயிலேறித்
தழைந்த சிவசுடர் தனையென மனதினில்
அழுந்த வுரைசெய வருமுக நகையொளி
தழைந்த நயனமு மிருமலர் சரணமு - மறவேனே
இரும்பை வதுளமொ டியைபல முகில்பொழி
லுறைந்த குயிலளி யொலிபர விடமயி
லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் - வளநாடா
இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக
டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக
இரைந்த அசுரரொ டிபபரி யமபுரம் - விடும்வேளே
சிரம்பொ னயனொடு முநிவர்க ளமரர்கள்
அரம்பை மகளிரொ டரகர சிவசிவ
செயம்பு வெனநட மிடுபத மழகியர் - குருநாதா
செழும்ப வளவொளி நகைமுக மதிநகு
சிறந்த குறமக ளிணைமுலை புதைபட
செயங்கொ டணைகுக சிவமலை மருவிய - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
42 |
| 146. குருதி மலசல |
ராகம் - கேதார கௌளை தாளம் - மிஸ்ர சாபு (3 1/2) தகிட - 1 1/2, தகதிமி - 2 |
தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன - தனதான |
| பாடல் |
குருதி மலசல மொழுகு நரகுட
லரிய புழுவது நெளியு முடல்மத
குருபி நிணசதை விளையு முளைசளி - யுடலூடே
குடிக ளெனபல குடிகை வலிகொடு
குமர வலிதலை வயிறு வலியென
கொடுமை யெனபிணி கலக மிடுமிதை - யடல்பேணி
மருவி மதனனுள் கரிய புளகித
மணிய சலபல கவடி மலர்புனை
மதன கலைகொடு குவடு மலைதனில் - மயலாகா
மனது துயரற வினைகள் சிதறிட
மதன பிணியொடு கலைகள் சிதறிட
மனது பதமுற வெனது தலைபத - மருள்வாயே
நிருதர் பொடிபட அமரர் பதிபெற
நிசித அரவளை முடிகள் சிதறிட
நெறிய கிரிகட லெரிய வுருவிய - கதிர்வேலா
நிறைய மலர்பொழி யமரர் முநிவரும்
நிருப குருபர குமர சரணென
நெடிய முகிலுடல் கிழிய வருபரி - மயிலோனே
பருதி மதிகனல் விழிய சிவனிட
மருவு மொருமலை யரையர் திருமகள்
படிவ முகிலென அரியி னிளையவ - ளருள்பாலா
பரம கணபதி யயலின் மதகரி
வடிவு கொடுவர விரவு குறமக
ளபய மெனவணை பழநி மருவிய - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
43 |
| 147. குழலடவி முகில் |
ராகம் - தாளம் - |
தனன தனதன தனன தனதன தனன தனதன - தனதான |
| பாடல் |
குழல டவிமுகில் பொழில்வி ரவில் நுதல்
குமுத வதரமு - றுவலாரம்
குழைம கரம்வளை மொழிகு யிலமுது
குயமு ளரிமுகை - கிரிசூது
விழிக யலயில்ப கழிவ ருணிகரு
விளைகு வளைவிட - மெனநாயேன்
மிகவ ரிவையரை அவறெ றிகள்சொலி
வெறிது ளம்விதன - முறலாமோ
கழல்ப ணியவினை கழல்ப ணியையணி
கழல்ப ணியவருள் - மயில்வீரா
கமலை திருமரு கமலை நிருதரு
கமலை தொளைசெய்த - கதிர்வேலா
பழனி மலைவரு பழநி மலைதரு
பழநி மலைமுரு - கவிகாசா
பரவு பரவைகொல் பரவை வணஅரி
பரவு மிமையவர் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
44 |
| 148. குழல்கள் சரிய |
ராகம் - தாளம் - |
தனன தனன தனன தனன தனன தனன தனன தனன - தனதான |
| பாடல் |
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிகளுலவ
கொலைகள் செயவெ - களவோடே
குலவு கிகிகி கிகிகி எனவு மிடறி லொலிகள்
குமுற வளையி - னொலிமீற
இளநி ரெனவு முலைக ளசைய உபய தொடையும்
இடையு மசைய - மயில்போல
இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர்
இடரில் மயலில் - உளர்வேனோ
மிளிரு மதுர கவிதை யொளிரும் அருண கிரிசொல்
விஜய கிரிசொல் - அணிவோனே
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி
விபின கெமனி - யருள்பாலா
பழைய மறையின் முடிவி லகர மகர உகர
படிவ வடிவ - முடையோனே
பழன வயல்கள் கமுகு கதலி பனசை யுலவ
பழநி மருவு - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
45 |
| 149. குறித்தமணி |
ராகம் - தாளம் - |
தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் - தனதான |
| பாடல் |
குறித்தமணிப் பணித்துகிலைத்
திருத்தியுடுத் திருட்குழலைக்
குலைத்துமுடித் திலைச்சுருளைப் - பிளவோடே
குதட்டியதுப் புதட்டைமடித்
தயிற்பயிலிட் டழைத்துமருட்
கொடுத்துணர்வைக் கெடுத்துநகக் - குறியாலே
பொறித்ததனத் தணைத்துமனச்
செருக்கினர்கைப் பொருட்கவரப்
புணர்ச்சிதனிற் பிணிப்படுவித் - திடுமாதர்
புலத்தலையிற் செலுத்துமனப்
ப்ரமத்தையறப் ப்ரசித்தமுறப்
புரித்தருளித் திருக்கழலைத் - தருவாயே
பறித்ததலைத் திருட்டமணக்
குருக்களசட் டுருக்களிடைப்
பழுக்களுகக் கழுக்கள்புகத் - திருநீறு
பரப்பியதத் திருப்பதிபுக்
கனற்புனலிற் கனத்தசொலைப்
பதித்தெழுதிப் புகட்டதிறற் - கவிராசா
செறித்தசடைச் சசித்தரியத்
தகப்பன்மதித் துகப்பனெனச்
சிறக்கவெழுத் தருட்கருணைப் - பெருவாழ்வே
திகழ்படுசெய்ப் பதிக்குளெனைத்
தடுத்தடிமைப் படுத்தஅருட்
டிருப்பழநிக் கிரிக்குமரப் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
46 |
| 150. குன்றுங் குன்று |
ராகம் - தாளம் - |
தந்தம் தந்தம் தந்தம் தந்தம் தனதன தனதன தனதன தனதன - தனதான |
| பாடல் |
குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும்
படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர்
இந்துஞ் சந்தந் தங்குந் தண்செங்
கமலமு மெனவொளிர் தருமுக வநிதையர்
கொஞ்சுங் கெஞ்சுஞ் செஞ்சும் வஞ்சஞ்
சமரச முறவொரு தொழில்வினை புரிபவர் - விரகாலும்
கும்பும் பம்புஞ் சொம்புந் தெம்புங்
குடியென வளர்தரு கொடியவர் கடியவர்
எங்கெங் கெம்பங் கென்றென் றென்றுந்
தனதுரி மையதென நலமுட னணைபவர்
கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தந்
பொருளுள தெவைகளு நயமொடு கவர்பவர் - மயலாலும்
என்றென் றுங்கன் றுந்துன் புங்கொண்
டுனதிரு மலரடி பரவிட மனதினில்
நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந்
தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற
இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந்
தமுமிக வருள்பெற விடைதரு விதமுன - மருள்வாயே
எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன்
அவன்விடு மதிசய வினையுறு மலகையை
வென்றுங் கொன்றுந் துண்டந் துண்டஞ்
செயுமரி யொருமுறை யிரணிய வலனுயிர்
நுங்குஞ் சிங்கம் வங்கந் தன்கண்
துயில்பவ னெகினனை யுதவிய கருமுகில் - மருகோனே
ஒன்றென் றென்றுந் துன்றுங் குன்றுந்
தொளைபட மதகரி முகனுடல் நெரிபட
டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண்
டிடியென விழுமெழு படிகளு மதிர்பட
ஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென்
றொலிசெய மகபதி துதிசெய அசுரரை - யடுவோனே
உந்தன் தஞ்சந் தஞ்சந் தஞ்சஞ்
சிவனருள் குருபர வெனமுநி வரர்பணி
யுந்தொந் தந்தொந் தந்தொந்ட தந்தென்
றொலிபட நடமிடு பரனரு ளறுமுக
உண்கண் வண்டுங் கொண்டுந் தங்கும்
விரைபடு குரவல ரலர்தரு மெழில்புனை - புயவீரா
அன்றென் றொன்றுங் கொண்டன் பின்றங்
கடியவர் தமையிகழ் சமணர்கள் கழுவினில்
அங்கஞ் சிந்தும் பங்கந் துஞ்சும்
படியொரு தொகுதியி னுரைநதி யெதிர்பட
அன்பின் பண்பெங் குங்கண் டென்பின்
அரிவையை யெதிர்வர விடுகவி புகல்தரு - திறலோனே
அண்டங் கண்டும் பண்டுண் டும்பொங்
கமர்தனில் விஜயவ னிரதமை நடவிய
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன்
தருமகன் முநிதழல் வருதசக ரிவர்வல
அங்கங் கஞ்சஞ் சங்கம் பொங்குங்
கயநிறை வளமுறு சிவகிரி மருவிய - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
47 |
| 151. கொந்துத் தரு |
ராகம் - தாளம் - |
தந்தத் தனதன தனனா தனனா தந்தத் தனதன தனனா தனனா தந்தத் தனதன தனனா தனனா - தனதான |
| பாடல் |
கொந்துத் தருகுழ லிருளோ புயலோ
விந்தைத் தருநுதல் சிலையோ பிறையோ
கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ - விழிவேலோ
கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ
வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ
கொங்குற் றுயரல்கு லரவோ ரதமோ - எனுமாதர்
திந்தித் திமிதிமி திமிதா திமிதோ
தந்தித் திரிகட கிடதா எனவே
சிந்திப் படிபயில் நடமா டியபா - விகள்பாலே
சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே
வந்தித் தருள்தரு மிருசே வடியே
சிந்தித் திடமிகு மறையா கியசீ - ரருள்வாயே
வெந்திப் புடன்வரு மவுணே சனையே
துண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய்
வென்றிக் கொருமலை யெனவாழ் மலையே - தவவாழ்வே
விஞ்சைக் குடையவர் தொழவே வருவாய்
கஞ்சத் தயனுட னமரே சனுமே
விந்தைப் பணிவிடை புரிபோ தவர்மே - லருள்கூர்வாய்
தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே
செங்கட் கருமுகில் மருகா குகனே
சொந்தக் குறமகள் கணவா திறல்சேர் - கதிர்காமா
சொம்பிற் பலவள முதிர்சோ லைகள்சூழ்
இஞ்சித் திருமகள் புடைசூ ழருள்சேர்
துங்கப் பழநியில் முருகா இமையோர் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
48 |
| 152. கோல குங்கும |
ராகம் - தாளம் - |
தான தந்தன தத்தன தத்தம் தான தந்தன தத்தன தத்தம் தான தந்தன தத்தன தத்தம் - தனதான |
| பாடல் |
கோல குங்கும கற்புர மெட்டொன்
றான சந்தன வித்துரு மத்தின்
கோவை செண்பக தட்பம கிழ்ச்செங் - கழுநீரின்
கோதை சங்கிலி யுற்றக ழுத்தும்
பூஷ ணம்பல வொப்பனை மெச்சுங்
கூறு கொண்டப ணைத்தனம் விற்கும் - பொதுமாதர்
பாலு டன்கனி சர்க்கரை சுத்தந்
தேனெ னும்படி மெத்தரு சிக்கும்
பாத கம்பகர் சொற்களி லிட்டம் - பயிலாமே
பாத பங்கய முற்றிட வுட்கொண்
டோது கின்றதி ருப்புகழ் நித்தம்
பாடு மன்பது செய்ப்பதி யிற்றந் - தவனீயே
தால முன்புப டைத்தப்ர புச்சந்
தேக மின்றிம திக்கவ திர்க்குஞ்
சாக ரஞ்சுவ றக்கிரி யெட்டுந் - தலைசாயச்
சாடு குன்றது பொட்டெழ மற்றுஞ்
சூர னும்பொடி பட்டிட யுத்தஞ்
சாத கஞ்செய்தி ருக்கைவி திர்க்குந் - தனிவேலா
ஆல முண்டக ழுத்தினி லக்குந்
தேவ ரென்புநி ரைத்தெரி யிற்சென்
றாடு கின்றத கப்பனு கக்குங் - குருநாதா
ஆட கம்புனை பொற்குடம் வைக்குங்
கோபு ரங்களி னுச்சியு டுத்தங்
காவி னன்குடி வெற்பினை னிற்கும் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
49 |
| 153. கோல மதிவதனம் |
ராகம் - தாளம் - |
தான தனதனன தான தனதனன தான தனதனன தான தனதனன தான தனதனன தான தனதனன - தனதான |
| பாடல் |
கோல மதிவதனம் வேர்வு தரஅளக
பாரம் நெகிழவிழி வேல்கள் சுழலநுவல்
கோவை யிதழ்வெளிற வாய்மை பதறியிள - முகையான
கோக னகவுபய மேரு முலையசைய
நூலி னிடைதுவள வீறு பறவைவகை
கூற யினியகள மோல மிடவளைகள் - கரமீதே
காலி னணிகனக நூபுரமு மொலிக
ளோல மிடஅதிக போக மதுமருவு
காலை வெழுசரச லீலை யளவுசெயு - மடமானார்
காதல் புரியுமநு போக நதியினிடை
வீழு கினுமடிமை மோச மறவுனது
காமர் கழலிணைக ளான தொருசிறிது - மறவேனே
ஞால முழுதுமம ரோர்கள் புரியுமிக
லாக வருமவுணர் சேர வுததியிடை
நாச முறஅமர்செய் வீர தரகுமர - முருகோனே
நாடி யொருகுறமின் மேவு தினைசெய்புன
மீதி லியலகல்கல் நீழ லிடைநிலவி
நாணம் வரவிரக மோது மொருசதுர - புரிவேலா
மேலை யமரர்தொழு மானை முகரரனை
யோடி வலம்வருமுன் மோது திரைமகர
வேலை யுலகைவல மாக வருதுரக - மயில்வீரா
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு முதல்வவயல் வாவி புடைமருவு
வீரை வருபழநி ஞான மலையில்வளர் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
50 |
மேலே செல்க
| 154. சகடத்திற் குழை |
ராகம் - தாளம் - |
தனனத்தத் தனனத் தத்தத் தனனத்தத் தனனத் தத்தத் - தனதான |
| பாடல் |
சகடத்திற் குழையிட் டெற்றிக்
குழலுக்குச் சரம்வைத் தெற்றிப்
புளகித்துக் குவளைக் கட்பொற்
கணையொத்திட் டுழலச் சுத்தித்
தரளைப்பற் பவளத் தொட்டக்
களபப்பொட் டுதலிட் டத்திக் - குவடான
தனதுத்திப் படிகப் பொற்பிற்
டசையப்பெட் பசளைத் துப்புக்
கொடியொத்திட் டிடையிற் பட்டைத்
தகையிற்றொட் டுகளப் பச்சைச்
சரணத்துக் கியலச் சுற்றிச்
சுழலிட்டுக் கடனைப் பற்றிக் - கொளுமாதர்
சுகமுற்றுக் கவலைப் பட்டுப்
பொருள்கெட்டுக் கடைகெட் டுச்சொற்
குளறிட்டுத் தடிதொட் டெற்றிப்
பிணியுற்றுக் கசதிப் பட்டுச்
சுகதுக்கத் திடர்கெட் டுற்றுத்
தளர்பட்டுக் கிடைபட் டுப்பிக் - கிடைநாளிற்
சுழலர்ச்சக் கிரியைச் சுற்றிட்
டிறுகக்கட் டுயிரைப் பற்றிக்
கொளுகப்பற் பலரைக் கட்டிக்
கரம்வைத்துத் தலையிற் குத்திச்
சுடுகட்டைச் சுடலைக் கட்டைக்
கிரையிட்டுப் பொடிபட் டுட்கிச் - சடமாமோ
திகுடத்திக் குகுடட் டுட்டுட்
டமடட்டட் டமடட் டிக்குட்
டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத்
தொகுதொகுத் தொகுதத் தொக்குச்
செகணக்கச் செகணச் செக்குத்
தகுடத்தத் தகுடத் தட்டுட் - டிடிபேரி
திமிலைக்கைத் துடிதட் டெக்கைப்
பகடிட்டுப் பறையொத் தக்கட்
டிகையெட்டுக் கடல்வற் றித்தித்
தரவுக்கக் கிரியெட் டுத்தைத்
தியருக்குச் சிரமிற் றுட்கச்
சுருர் பொற்புச் சொரியக் கைத்தொட் - டிடும்வேலா
பகலைப்பற் சொரியத் தக்கற்
புதிபுக்கட் டழலிட் டுத்திட்
புரமட்கிக் கழைவிற் புற்பச்
சரனைச்சுட் டயனைக் கொத்திப்
பவுரிக்கொட் பரமர்க் குச்சற்
குருவொத்துப் பொருளைக் கற்பித் - தருள்வோனே
பவளப்பொற் கிரிதுத் திப்பொற்
றனகொச்சைக் கிளிசொற் பற்றிப்
பரிவுற்றுக் கமலப் புட்பத்
திதழ்பற்றிப் புணர்ச்சித் ரப்பொற்
படிகத்துப் பவளப் பச்சைப்
பதமுத்துப் பழநிச் சொக்கப் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
51 |
| 155. சிந்துர கூரம |
ராகம் - தாளம் - |
தந்தன தானன தத்தத் தந்தன தந்தன தானன தத்தத் தந்தன தந்தன தானன தத்தத் தந்தன - தனதான |
| பாடல் |
சிந்துர கூரம ருப்புச் செஞ்சரி
செங்கைகு லாவந டித்துத் தென்புற
செண்பக மாலைமு டித்துப் பண்புள - தெருவூடே
சிந்துகள் பாடிமு ழக்கிச் செங்கய
லம்புகள் போலவி ழித்துச் சிங்கியில்
செம்பவ ளாடைது லக்கிப் பொன்பறி - விலைமாதர்
வந்தவ ராரென ழைத்துக் கொங்கையை
யன்பூற மூடிநெ கிழ்த்திக் கண்பட
மஞ்சணி ராடி னுக்கிப் பஞ்சனை - தனிலேறி
மந்திர மோகமெ ழுப்பிக் கெஞ்சிட
முன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள்
மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத - மருள்வாயே
இந்திர நீலவ னத்திற் செம்புவி
யண்டக டாகம ளித்திட் டண்டர்க
ளெண்படு சூரைய ழித்துக் கொண்டரு - ளொருபேடி
இன்கன தேரைந டத்திச் செங்குரு
மண்டல நாடும ளித்துப் பஞ்சவ
ரின்புறு தோழ்மையு டைக்கத் தன்திரு - மருகோனே
சந்திர சூரியர் திக்கெட் டும்புக
ழந்தமில் வாழ்வது பெற்றுத் தங்கிய
சங்கர னார்செவி புக்கப் பண்பருள் - குருநாதா
சம்ப்ரப மானகு றத்திக் கின்புறு
கொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தர
தண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கிய - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
52 |
| 156. சிவனார் |
ராகம் - ஜோன்புரி / சங்கராபரணம் தாளம் - கண்டசாபு (2 1/2) (எடுப்பு - 1/2 தள்ளி) தக - 1, தகிட - 1 1/2 |
தனனா தனந்ததன தனனா தனந்ததன தனனா தனந்ததன - தனதான |
| பாடல் |
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் - குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி ரும்பியுளம் - நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சவென - வரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது - புரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் - மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு - விளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் - வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
53 |
| 157. சிறுபறையும் |
ராகம் - தாளம் - |
தனதனன தனனதன தத்தத் தனத்ததன தனதனன தனனதன தத்தத் தனத்ததன தனதனன தனனதன தத்தத் தனத்ததன - தனதான |
| பாடல் |
சிறுபறையு முரசுதுடி சத்தக் கணப்பறையு
மொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடி
சிறுகயிறு நெடிதுகொடு கட்டிட் டழுக்கஇனி - யணுகாதே
சிலதமர்க ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடு
சுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல்
திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலை - யொழியாதே
மறைமுறையி னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடி
உடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம்
வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவது - மொருநாளே
வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட
ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய
மனமகிழ இனியமொழி செப்பிச் சிவத்தபத - மருள்வாயே
நறையிதழி யறுகுபல புட்பத் திரட்களொடு
சிறுபிறையு மரவுமெழி லப்புத் திருத்தலையி
னளினமுற அணிசடையர் மெச்சிப் ப்ரியப்படவு - மயிலேறி
நவநிதிகள் குமுகுமென வெற்புத் திரட்சுழல
அகிலமுத லெழுபுவன மெத்தத் திடுக்கிடவும்
நவமணிகள் உரகனுடல் கக்கத் துரத்திவரு - முருகோனே
குறவர்முனை கெடமனது வெட்கப் படக்குடிலில்
மலையிலெழு தினையிதணில் வைத்துச் சிறுக்கியிரு
குவிமுலையு மணியிடையு மெச்சிப் புணர்ச்சிசெயு - மணவாளா
குறுமுநிவ னிருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற
அறிவுநெறி தவநிலைகள் செப்புத் தமிழ்க்கினிய
குருகுமர பழநிவளர் வெற்புத் தனிற்றிகழு - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
54 |
| 158. சீயுதிரம் |
ராகம் - வலஜி தாளம் - ஆதி (4 களை) (32) தகிட - 1 1/2, தக - 1, தகிட - 1 1/2 |
தானன தந்த தானதன தந்த தானன தந்த தானதன தந்த தானன தந்த தானதன தந்த - தனதான |
| பாடல் |
சீயுதிர மெங்கு மேய்புழுதி நிரம்பு
மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை
தீநரிகள் கங்கு காகமிவை தின்ப - தொழியாதே
தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த
மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு
சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து - நிலைகாணா
ஆயதுந மன்கை போகவுயி ரந்த
நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை
யாகியவு டம்பு பேணிநிலை யென்று - மடவார்பால்
ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி
தானுமிக வந்து மேவிடம யங்கு
மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு - புரிவாயே
மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
பார்முழுது மண்ட கோளமுந டுங்க
வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை - யதனாலே
வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு
நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த
வாரண இரண்டு கோடொடிய வென்ற - நெடியோனாம்
வேயினிசை கொண்டு கோநிரைபுரந்து
மேயல்புரி செங்கண் மால்மருக துங்க
வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து - பொடியாக
வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு
கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க
வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
55 |
| 159. சீறலசடன் வினை |
ராகம் - ஹம்ஸநாதம் தாளம் - ஆதி |
தான தனதனன தான தனதனன தான தனதனன - தனதான |
| பாடல் |
சீற லசடன் வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடி - பவநோயே
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலி - எவரோடுங்
கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியு - னடிபேணாக்
கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள் - புரிவாயே
மாறு படுமவுணர் மாள அமர்பொருது
வாகை யுளமவுலி - புனைவோனே
மாக முகடதிர வீசு சிறைமயிலை
வாசி யெனவுடைய - முருகோனே
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு மொருபெருமை - யுடையோனே
வீரை யுறைகுமர தீர தரபழநி
வேல இமையவர்கள் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
56 |
| 160. சுருதிமுடி மோன |
ராகம் - நாட்டகுறிஞ்சி தாளம் - சதுஸ்ர த்ருவம் (எடுப்பு /4/4/40) கண்ட நடை (35) |
தனதனன தானந்த தத்ததன தானதன தனதனன தானந்த தத்ததன தானதன தனதனன தானந்த தத்ததன தானதன - தனதான |
| பாடல் |
சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ
சமயவடி வாய்வந்த அத்துவித மானபர
சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத - லொருவாழ்வே
துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல
மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக
சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய - உணராதே
கருவிலுரு வேங்கு சுக்கிலநி தானவளி
பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை
கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல் - வினைதானே
கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ
மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி
கருதசுழ மாமிந்த மட்டைதனை யாளஉன - தருள்தாராய்
ஒருநியம மேவிண்ட சட்சமய வேதஅடி
முடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயி
ருடலுணர்வ தாயெங்கு முற்பனம தாகஅம - ருளவோனே
உததரிச மாமின்ப புத்தமிர்த போகசுக
முதவுமம லாநந்த சத்திகர மேவுணர
வுருபிரண வாமந்த்ர கர்த்தவிய மாகவரு - குருநாதா
பருதிகதி ரேகொஞ்சு நற்சரண நூபுரம
தசையநிறை பேரண்ட மொக்கநட மாடுகன
பதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொரு - திறலோனே
பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில்
சரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர்
பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
57 |
| 161. சுருளளகம் |
ராகம் - தாளம் - |
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த - தனதான |
| பாடல் |
சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்து
சுரதக்ரியை யால்வி ளங்கு - மதனூலே
சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்கு
தொழிலுடைய யானு மிங்கு - னடியார்போல்
அருமறைக ளேநி னைந்து மநுநெறியி லேந டந்து
அறிவையறி வால றிந்து - நிறைவாகி
அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப
அமுதையொழி யாத ருந்த - அருள்வாயே
பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப ணிந்து
பரிதகழை யாமுன் வந்து - பரிவாலே
பரவியவி பீஷ ணன்பொன் மகுடமுடி சூட நின்ற
படைஞரொடி ராவ ணன்ற - னுறவோடே
எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட
ரகுபதியி ராம சந்த்ரன் - மருகோனே
இளையகுற மாது பங்க பழநிமலை நாத கந்த
இமையவள்த னால்ம கிழ்ந்த - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
58 |
| 162. ஞானங்கொள் |
ராகம் - பிலஹரி தாளம் - அங்கதாளம் (5 1/2) தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2, தகிட - 1 1/2 |
தானந்த தனன தான தானந்த தனன தான தானந்த தனன தான - தனதான |
| பாடல் |
ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத
நாடண்டி நமசி வாய - வரையேறி
நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய
நாதங்க ளொடுகு லாவி - விளையாடி
ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம
லோமங்கி யுருவ மாகி - யிருவோரும்
ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி
லோகங்கள் வலம தாட - அருள்தாராய்
தேனங்கொ ளிதழி தாகி தாரிந்து சலில வேணி
சீரங்க னெனது தாதை - ஒருமாது
சேர்பஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி
சேர்பங்கி னமல நாத - னருள்பாலா
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல
காடந்த மயிலி லேறு - முருகோனே
காமன்கை மலர்கள் நாண வேடம்பெ ணமளி சேர்வை
காணெங்கள் பழநி மேவு - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
59 |
| 163. தகர நறுமலர் |
ராகம் - பூர்வி கல்யாணி தாளம் - அங்கதாளம் (7 1/2) தகிட - 1 1/2, தகதிமி - 2, தகதிமி - 2, தகதிமி - 2 |
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன - தனதான |
| பாடல் |
தகர நறுமலர் பொதுளிய குழலியர்
கலக கெருவித விழிவலை படவிதி
தலையி லெழுதியு மனைவயி னுறவிடு - வதனாலே
தனயர் அனைமதர் மனைவியர் சினெகிதர்
சுரபி விரவிய வகையென நினைவுறு
தவன சலதியின் முழுகியெ யிடர்படு - துயர்தீர
அகர முதலுள பொருளினை யருளிட
இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ
அரக ரெனவல னிடமுற எழிலுன - திருபாதம்
அருள அருளுடன் மருளற இருளற
கிரண அயில்கொடு குருகணி கொடியொடு
அழகு பெறமர கதமயில் மிசைவர - இசைவாயே
சிகர குடையினி னிரைவர இசைதெரி
சதுரன் விதுரனில் வருபவ னளையது
திருடி யடிபடு சிறியவ னெடியவன் - மதுசூதன்
திகிரி வளைகதை வசிதநு வுடையவ
னெழிலி வடிவின னரவுபொன் முடிமிசை
திமித திமிதிமி யெனநட மிடுமரி - மருகோனே
பகர புகர்முக மதகரி யுழைதரு
வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக
பரம குருபர இமகிரி தருமயில் - புதல்வோனே
பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய
நறவு நிறைவயல் கமுகடர் பொழில்திகழ்
பழநி மலைவரு புரவல அமரர்கள் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
60 |
மேலே செல்க
| 164. தகைமைத் தனியிற் |
ராகம் - தாளம் - |
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் - தனதான |
| பாடல் |
தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத்
தநுமுட் டவளைப் - பவனாலே
தரளத் திரளிற் புரறக் கரளத்
தமரத் திமிரக் - கடலாலே
உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக்
கொளிமட் குமிகைப் - பொழுதாலே
உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக்
குனநற் பிணையற் - றரவேணும்
திகைபத் துமுகக் கமலத் தனைமுற்
சிறையிட் டபகைத் - திறல்வீரா
திகழ்கற் பகமிட் டவனக் கனகத்
திருவுக் குருகிக் - குழைமார்பா
பகலக் கிரணப் பரணச் சடிலப்
பரமற் கொருசொற் - பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக் குமரப் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
61 |
| 165. தமரு மமரு |
ராகம் - ஹமீர் கல்யாணி தாளம் - ஆதி (12) |
தனன தனன தனன தனன தனன தனன - தனதான |
| பாடல் |
தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் - அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய - எறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவு - மிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு - தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி - மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி - மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் - தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிறு
மழகு முடைய - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
62 |
| 166. தலைவலி மருத்தீடு |
ராகம் - செஞ்சுருட்டி தாளம் - சதுஸ்ர த்ருவம் (எடுப்பு /4/4/40) கண்ட நடை (35) |
தனதனன தத்தான தானான தானதன தனதனன தத்தான தானான தானதன தனதனன தத்தான தானான தானதன - தனதான |
| பாடல் |
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி - யணுகாதே
தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
சரியும்வய துக்கேது தாரிர்சொ லீரெனவும் - விதியாதே
உலைவறவி ருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
முனதடியி னிற்சூட வேநாடு மாதவர்க - ளிருபாதம்
உளமது தரித்தேவிடி னாவோடு பாடியருள்
வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை - வரவேணும்
அலைகட லடைத்தேம காகோர ராவணனை
மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை
அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு - மருகோனே
அறுகினை முடித்தோனை யாதார மானவனை
மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் - வருவோனே
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
யிருசரண வித்தார வேலாயு தாவுயர்செய்
பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு - மணவாளா
பதுமவய லிற்பூக மீதேவ ரால்கள் துயில்
வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
பழநிவரு கற்புரு கோலாக லாவமரர் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
63 |
| 167. திடமிலிசற் குணமிலிநற் |
ராகம் - பந்துவராளி தாளம் - கண்டசாபு (2 1/2) |
| தனதனனத் தனதனனத் தனதனனத் - தனதான |
| பாடல் |
திடமிலிசற் குணமிலிநற் றிறமிலியற் - புதமான
செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் - கமுமீதே
இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் - றமிழ்பாட
இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் - பெறவேணும்
கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப் - பொரும்வேலா
கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக் - கிறகோடே
படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக் - கொருபாலா
பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
64 |
| 168. திமிர வுததி |
ராகம் - பைரவி தாளம் - திஸ்ர ஏகம் (3) (எடுப்பு - 1/2 இடம்) |
தனன தனன தனன தனன தனன தனன - தனதான |
| பாடல் |
திமிர வுததி யனைய நரக
செனன மதனில் - விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு - மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் - வரவேநின்
அருள தருளி யெனையு மனதோ
டடிமை கொளவும் - வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருளு - மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை - விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் - மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
65 |
| 169. தோகை மயிலே |
ராகம் - தாளம் - |
தானதன தானதன தானான தானதன தானதன தானதன தானான தானதன தானதன தானதன தானான தானதன - தனதான |
| பாடல் |
தோகைமயி லேகமல மானேயு லாசமிகு
காமதுரை யானமத வேள்பூவை யேயினிமை
தோயுமநு போகசுக லீலாவி நோதமுழு - துணர்தேனே
சூதனைய சீதஇள நீரான பாரமுலை
மீதணைய வாருமிதழ் தாரிரெ னாணைமொழி
சோர்வதிலை யானடிமை யாவேனு மாணைமிக - மயலானேன்
ஆகமுற வேநகம தாலேவி டாதஅடை
யாளமிட வாருமென வேமாத ரார்களுட
னாசைசொலி யேயுழலு மாபாத னீதியிலி - யுனையோதேன்
ஆமுனது நேயஅடி யாரோடு கூடுகில
னீறுநுதல் மீதிடலி லாமூட னேதுமிலி
யாயினுமி யானடிமை யீடேற வேகழல்கள் - தருவாயே
மாகமுக டோடகில பாதாள மேருவுட
னேசுழல வாரியது வேதாழி யாவமரர்
வாலிமுத லானவர்க ளேனோர்க ளாலமுது - கடைநாளில்
வாருமென வேயொருவர் நோகாம லாலவிட
மீசர்பெறு மாறுதவி யேதேவர் யாவர்களும்
வாழஅமு தேபகிரு மாமாய னாரினிய - மருகோனே
மேகநிக ரானகொடை மானாய காதிபதி
வாரிகலி மாருதக ரோபாரி மாமதன
வேள்கலிசை வாழவரு காவேரி சேவகன - துளமேவும்
வீரஅதி சூரர்கிளை வேர்மாள வேபொருத
தீரகும ராகுவளை சேரோடை சூழ்கழனி
வீரைநகர் வாழ்பழநி வேலாயு தாவமரர் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
66 |
| 170. நாத விந்து |
ராகம் - தாளம் - |
தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன - தனதான |
| பாடல் |
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம - வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம - பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம - கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம - அருள்தாராய்
ஈத லும்பல கோலால பூஜையும்
ஓத லுங்குண ஆசார நீதியும்
ஈர முங்குரு சீர்பாத சேவையு - மறவாத
ஏழ்த லம்புகழ் காவேரி யால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடாளு நாயக - வயலூரா
ஆதம ரம்பயி லாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயி - லையிலேகி
ஆதி யந்தவு லாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
67 |
| 171. நிகமமெனி லொன்று |
ராகம் - தாளம் - |
தனதனன தந்த தத்த தானன தனதனன தந்த தத்த தானன தனதனன தந்த தத்த தானன - தனதான |
| பாடல் |
நிகமமெனி லொன்று மற்று நாடொறு
நெருடுகவி கொண்டு வித்தை பேசிய
நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள - பெயர்கூறா
நெளியமுது தண்டு சத்ர சாமர
நிபிடமிட வந்து கைக்கு மோதிர
நெடுகியதி குண்ட லப்ர தாபமு - முடையோராய்
முகமுமொரு சம்பு மிக்க நூல்களு
முதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில்
முடிவிலவை யொன்று மற்று வேறொரு - நிறமாகி
முறியுமவர் தங்கள் வித்தை தானிது
முடியவுனை நின்று பத்தி யால்மிக
மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர - அருள்வாயே
திகுதிகென மண்ட விட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி யாருகர்
திகையினமண் வந்து விட்ட போதினு - மமையாது
சிறியகர பங்க யத்து நீறொரு
தினையளவு சென்று பட்ட போதினில்
தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் - கழுவேற
மகிதலம ணைந்த அத்த யோனியை
வரைவறம ணந்து நித்த நீடருள்
வகைதனைய கன்றி ருக்கு மூடனை - மலரூபம்
வரவரம னந்தி கைத்த பாவியை
வழியடிமை கொண்டு மிக்க மாதவர்
வளர்பழநி வந்த கொற்ற வேலவ - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
68 |
| 172. நெற்றி வெயர்த்துளி |
ராகம் - தாளம் - |
தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன - தனதான |
| பாடல் |
நெற்றிவெ யர்த்துளி துளிக்க வேயிரு
குத்துமு லைக்குட மசைத்து வீதியி
னிற்பவர் மைப்படர் விழிக்க லாபியர் - மொழியாலே
நித்தம யக்கிகள் மணத்த பூமலர்
மெத்தையில் வைத்ததி விதத்தி லேயுட
னெட்டுவ ரத்தொழில் கொடுத்து மேவியு - முறவாடி
உற்றவ கைப்படி பொருட்கள் யாவையு
மெத்தவு நட்பொடு பறித்து நாடொறு
முற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்க - ளுறவாமே
உச்சித மெய்ப்புற அனைத்து யாவுடன்
மெய்ப்படு பத்தியி னிணக்க மேபெற
வுட்குளிர் புத்தியை யெனக்கு நீதர - வருவாயே
கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ்
வுற்றொரு பொற்கொடி களிக் வேபொரு
கற்பனை நெற்பல அளித்த காரண - னருள்பாலா
கற்பந கர்க்களி றளித்த மாதணை
பொற்புய மைப்புயல் நிறத்த வானவர்
கட்கிறை யுட்கிட அருட்க்ரு பாகர - எனநாளும்
நற்றவ ரர்ச்சனை யிடத்த யாபர
வஸ்துவெ னப்புவி யிடத்தி லேவளர்
நத்தணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு - மருகோனே
நட்டுவர் மத்தள முழக்க மாமென
மைக்குல மெத்தவு முழக்க மேதரு
நற்பழ நிப்பதி செழிக்க மேவிய - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
69 |
| 173. பகர்தற்கரி தான |
ராகம் - வஸந்தா தாளம் - அங்கதாளம் (6 1/2) தகதிமிதக - 3, தகிட - 1 1/2, தகதிமி - 2 |
தனனத்தன தான தந்தன தனனத்தன தான தந்தன தனனத்தன தான தந்தன - தனதான |
| பாடல் |
பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு
பயிலப்பல காவி யங்களை - யுணராதே
பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய்மடந்தையர்
பசலைத்தன மேபெ றும்படி - விரகாலே
சகரக்கடல் சூழு மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல்
சருகொத்துள மேய யர்ந்துடல் - மெலியாமுன்
தகதித்திமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி
தனிலற்புத மாக வந்தருள் - புரிவாயே
நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற்பொழி பாலை யுண்டிடு
நுவல்மெய்ப்புள பால னென்றிடு - மிளையோனே
நுதிவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட
நொடியிற்பரி வாக வந்தவன் - மருகோனே
அகரப்பொரு ளாதி யொன்றிடு முதலக்கர மான தின்பொருள்
அரனுக்கினி தாமொ ழிந்திடு - குருநாதா
அமரர்க்கிறை யேவ ணங்கிய பழநித்திரு வாவி னன்குடி
அதனிற்குடி யாயி ருந்தருள் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
70 |
மேலே செல்க
| 174. பஞ்ச பாதகன் |
ராகம் - ஹுஸேனி தாளம் - அங்கதாளம் (8 1/2) தகிட - 1 1/2, தகதிமி - 2 தகிட - 1 1/2, தக - 1, தகிட - 1 1/2, தக - 1 |
தந்த தானனந் தானதன தானதன தந்த தானனந் தானதன தானதன தந்த தானனந் தானதன தானதன - தனதான |
| பாடல் |
பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்வெகு
வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி
பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை - பவுஷாசை
பங்கன் மோதியம் பாழ்நரகில் வீணின்விழ
பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை
பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு - சதிகாரர்
அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர்
தங்கள் வாணிபங் காரியம லாமலரு
ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக - ழடியேனை
அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி
சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி
கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் - புரிவாயே
வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவ
டுங்க வேயினன் போலவொளிர் வேலைவிடு
வண்கை யாகடம் பேடுதொடை யாடுமுடி - முருகோனே
மங்கை மோகசிங் காரரகு ராமரிட
தங்கை சூலியங் காளியெமை யீணபுகழ்
மங்க ளாயிசந் தானசிவ காமியுமை - யருள்பாலா
கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடை
பெண்கள் நாயகந் தோகைமயில் போலிரச
கொங்கை மால்குறம் பாவையவல் தீரவர - அணைவோனே
கொண்டல் சூழுமஞ் சோலைமலர் வாவிகயல்
கந்து பாயநின் றாடுதுவர் பாகையுதிர்
கந்தி யோடகஞ் சேர்பழநி வாழ்குமர - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
71 |
| 175. பாரியான கொடை |
ராகம் - பாகேஸ்ரீ தாளம் - அங்கதாளம் (7 1/2) தகிட - 1 1/2, தகிட - 1 1/2, தக - 1, தகிட - 1 1/2, தகதிமி - 2 |
தான தானதனத் தந்த தானன தான தானதனத் தந்த தானன தான தானதனத் தந்த தானன - தனதான |
| பாடல் |
பாரி யானகொடைக் கொண்ட லேதிரு
வாழ்வி சாலதொடைத் திண்பு யாஎழு
பாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக - அபிராம
பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள்
சீல ஞாலவிளக் கின்ப சீவக
பாக சாதனவுத் துங்க மானத - எனவோதிச்
சீர தாகஎடுத் தொன்று மாகவி
பாடி னாலுமிரக் கஞ்செ யாதுரை
சீறு வார்கடையிற் சென்று தாமயர் - வுறவீணே
சேய பாவகையைக் கொண்டு போயறி
யாம லேகமரிற் சிந்து வார்சிலர்
சேய னார்மனதிற் சிந்தி யாரரு - குறலாமோ
ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடு
வாயி னேர்படவுற் றன்று மூலமெ
னார வாரமதத் தந்தி தானுப - அருள்மாயன்
ஆதி நாராணனற் சங்க பாணிய
னோது வார்களுளத் தன்பன் மாதவ
னான நான்முகனற் றந்தை சீதரன் - மருகோனே
வீர சேவகவுத் தண்ட தேவகு
மார ஆறிருபொற் செங்கை நாயக
வீசு தோகைமயிற் றுங்க வாகன - முடையோனே
வீறு காவிரியுட் கொண்ட சேகர
னான சேவகனற் சிந்தை மேவிய
வீரை வாழ்பழநித் துங்க வானவர் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
72 |
| 176. புடவிக் கணி |
ராகம் - சாருகேசி தாளம் - ஆதி - 2 களை |
தனனத் தனதன தனதன தந்தத் தனனத் தனதன தனதன தந்தத் தனனத் தனதன தனதன தந்தத் - தனதான |
| பாடல் |
புடவிக் கணிதுகி லெனவள ரந்தக்
கடலெட் டையுமற குடிமுநி யெண்கட்
புநிதச் சததள நிலைகொள்ச யம்புச் - சதுர்வேதன்
புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக்
கடினத் தொடுசில சிறுநகை கொண்டற்
புதகர்த் தரகர பரசிவ னிந்தத் - தனிமூவ
ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற்
செவியுட் பிரணவ ரகசிய மன்புற
றிடவுற் பனமொழி யுரைசெய் குழந்தைக் - குருநாதா
எதிருற் றசுரர்கள் படைகொடு சண்டைக்
கிடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட்
டிடவுக் கிரமொடு வெகுளிகள் பொங்கக் - கிரியாவும்
பொடிபட் டுதிரவும் விரிவுறு மண்டச்
சுவர்விட் டதிரவு முகடுகி ழிந்தப்
புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத் - தமுமாகப்
பொருதுக் கையிலுள அயில்நிண முண்கக்
குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப்
புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக் - குமரேசா
படியிற் பெருமித தகவுயர் செம்பொற்
கிரியைத் தனிவலம் வரஅர னந்தப்
பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற் - பதனாலே
பரன்வெட் கிடவுற மிகவும்வெ குண்டக்
கனியைத் தரவிலை யெனஅருள் செந்திற்
பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
73 |
| 177. புடைசெப்பென |
ராகம் - தாளம் - |
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் - தனதான |
| பாடல் |
புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட்
பொருமிக் கலசத் - திணையாய
புளகக் களபக் கெருவத் தனமெய்ப்
புணரத் தலையிட் - டமரேசெய்
அடைவிற் றினமுற் றவசப் படுமெற்
கறிவிற் பதடிக் - கவமான
அசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற்
றடிமைக் கொருசொற் - புகல்வாயே
குடமொத் தகடக் கரடக் கலுழிக்
குணமெய்க் களிறுக் - கிளையோனே
குடிபுக் கிடமிட் டசுரப் படையைக்
குறுகித் தகரப் - பொரும்வேலா
படலைச் செறிநற் கதலிக் குலையிற்
பழமுற் றொழுகப் - புனல்சேர்நீள்
பழனக் கரையிற் கழைமுத் துகுநற்
பழநிக் குமரப் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
74 |
| 178. பெரியதோர் கரி |
ராகம் - தாளம் - |
தனதனா தனதன தந்த தானன தனதனா தனதன தந்த தானன தனதனா தனதன தந்த தானன - தனதான |
| பாடல் |
பெரியதோர் கரியிரு கொம்பு போலவெ
வடிவமார் புளகித கும்ப மாமுலை
பெருகியே யொளிசெறி தங்க வாரமு - மணியான
பிறையதோ வெனுநுதல் துங்க மீறுவை
அயிலதோ வெனுமிரு கண்க ளாரவெ
பிறகெலாம் விழுகுழல் கங்கு லாரவெ - வருமானார்
உரியதோர் பொருள்கொடு வந்த பேர்களை
மனையிலே வினவியெ கொண்டு போகிய
யுளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் - மயலாலே
உருகியே யுடலற வெம்பி வாடியெ
வினையிலே மறுகியெ நொந்த பாதக
னுனதுதாள் தொழுதிட இன்ப ஞானம - தருள்வாயே
அரியதோ ரமரர்க ளண்ட மேறவெ
கொடியதோ ரசுரர்க ளங்க மாளவெ
அடலதோ டமரர்புரி கின்ற கூரிய - வடிவேலா
அரகரா வெனமிக அன்பர் சூழவெ
கடியதோர் மயில்மிசை யன்றை யேறியெ
அவனியோர் நொடிவரு கின்ற காரண - முருகோனே
பரியதோர் கயிறனை கொண்டு வீசவெ
உறியதோய் தயிர்தனை யுண்டு நாடியே
பசியதோ கெடவருள் கொண்ட மாயவன் - மருகோனே
பரமமா நதிபுடை கொண்ட ணாவவெ
வனசமா மலரினில் வண்டு லாவவெ
பழநிமா மலைதனி லென்று மேவிய - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
75 |
| 179. போத கந்தரு |
ராகம் - பந்துவராளி தாளம் - அங்கதாளம் (8) தகிட - 1 1/2, தகதிமி - 2, தகதிமி - 2, தகிட - 1 1/2, தக - 1 |
தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன - தனதான |
| பாடல் |
போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம - பணியாவும்
பூணு கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ் ஸாமீ நமோநம - அரிதான
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டைகொள் தாளா நமோநம - அழகான
மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம
வீறு கொண்டவி சாகா நமோநம - அருள்தாராய்
பாத கஞ்செறி சூராதி மாளவெ
கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
பார அண்டர்கள் வானாடு சேர்தர - அருள்வோனே
பாதி சந்திர னேசூடும் வேணியர்
சூல சங்கர னார்கீத நாயகர்
பார திண்புய மேசேரு சோதியர் - கயிலாயர்
ஆதி சங்கர னார்பாக மாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயான நாரணி - அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
76 |
| 180. மந்தரம தெனவே |
ராகம் - தாளம் - |
தந்ததன தனனா தனந்த தந்ததன தனனா தனந்த தந்ததன தனனா தனந்த - தனதான |
| பாடல் |
மந்தரம தெனவே சிறந்த
கும்பமுலை தனிலே புனைந்த
மஞ்சள்மண மதுவே துலங்க - வகைபேசி
மன்றுகமழ் தெருவீ திவந்து
நின்றவரை விழியால் வளைந்து
வந்தவரை யருகே யணைந்து - தொழில்கூறி
எந்தளவு மினிதா கநம்பு
தந்துபொருள் தனையே பிடுங்கி
யின்பமருள் விலைமாதர் தங்கள் - மனைதேடி
எஞ்சிமன முழலாம லுன்றன்
அன்புடைமை மிகவே வழங்கி
என்றனையு மினிதாள இன்று - வரவேணும்
விந்தையெனு முமைமா துதந்த
கந்தகுரு பரதே வவங்க
மென்றவரை தனில்மேவு மெந்தை - புதல்வோனே
மிஞ்சுமழ கினிலே சிறந்த
மங்கைகுற மடமா துகொங்கை
மென்கிரியி லிதமா யணைந்த - முருகோனே
சிந்தைமகிழ் புலவோர்கள் வந்து
வந்தனைசெய் சரணார விந்த
செந்தமிழ் லுனையே வணங்கு - குருநாதர்
தென்றல்வரை முநிநாத ரன்று
கும்பிடந லருளே பொழிந்த
தென்பழநி மலைமே லுகந்த - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
77 |
| 181. மருமலரினன் துரந்து |
ராகம் - தாளம் - |
தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த - தனதான |
| பாடல் |
மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி
மதியொடுபி றந்து முன்பெய் - வதையாலே
வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த
மதலையென வந்து குன்றின் - வடிவாகி
இருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்து
இரவுபகல் கொண்டொ டுங்கி - யசடாகும்
இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்து
னிணையடிவ ணங்க என்று - பெறுவேனோ
திருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கை
திகழெரியி டுங்கு ரங்கை - நெகிழாத
திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள்
செறிவுடன் றிந்து வென்ற - பொறியாளர்
பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற
பரமபத நண்ப ரன்பின் - மருகோனே
பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க
பழநிமலை வந்த மர்ந்த - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
78 |
| 182. மனக்கவலை |
ராகம் - கேதாரகௌளை தாளம் - அங்கதாளம் (5 1/2) (எடுப்பு 1/2 தள்ளி) தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2, தகிட - 1 1/2 |
தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த - தனதான |
| பாடல் |
மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
வகைக்குமநு நூல்வி தங்கள் - தவறாதே
வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி
மயக்கமற வேத முங்கொள் - பொருள்நாடி
வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து
மிகுத்தபொரு ளாக மங்கள் - முறையாலே
வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
மிகுக்குமுனை யேவ ணங்க - வரவேணும்
மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து
மலர்ப்பதம தேப ணிந்த - முநிவோர்கள்
வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி
மருட்டிவரு சூரை வென்ற - முனைவேலா
தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து
செகத்தைமுழு தாள வந்த - பெரியோனே
செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த
திருப்பழநி வாழ வந்த - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
79 |
| 183. மலரணி கொண்டை |
ராகம் - தாளம் - |
தனதன தந்தத் தனத்த தானன தனதன தந்தத் தனத்த தானன தனதன தந்தத் தனத்த தானன - தனதான |
| பாடல் |
மலரணி கொண்டைச் சொருக்கி லேயவள்
சொலுமொழி யின்பச் செருக்கி லேகொடு
மையுமடர் நெஞ்சத் திருக்கி லேமுக - மதியாலே
மருவுநி தம்பத் தடத்தி லேநிறை
பரிமள கொங்கைக் குடத்தி லேமிக
வலியவும் வந்தொத் திடத்தி லேவிழி - வலையாலே
நிலவெறி யங்கக் குலுக்கி லேயெழில்
வளைபுனை செங்கைக் கிலுக்கி லேகன
நிதிபறி யந்தப் பிலுக்கி லேசெயு - மொயிலாலே
நிதமிய லுந்தர்க் குணத்தி லேபர
வசமுட னன்புற் றிணக்கி லேயொரு
நிமிஷமி ணங்கிக் கணத்தி லேவெகு - மதிகேடாய்
அலையநி னைந்துற் பநத்தி லேயநு
தினமிகு மென்சொப் பனத்தி லேவர
அறிவும ழிந்தற் பனத்தி லேநிதம் - உலைவேனோ
அசடனை வஞ்சச் சமர்த்த னாகிய
கசடனை யுன்சிற் கடைக்கணாடிய
மலர்கொடு நின்பொற் பதத்தை யேதொழ - அருள்தாராய்
பலபல பைம்பொற் பதக்க மாரமு
மடிமைசொ லுஞ்சொற் றமிழ்ப்ப னீரொடு
பரிமள மிஞ்சக் கடப்ப மாலையு - மணிவோனே
பதியினில் மங்கைக் கதித்த மாமலை
யொடுசில குன்றிற் றரித்து வாழ்வுயர்
பழநியி லன்புற் றிருக்கும் வானவர் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
80 |
மேலே செல்க
| 184. முகிலளகத்திற் கமழ்ந்த |
ராகம் - தாளம் - |
தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன - தந்ததான |
| பாடல் |
முகிலள கத்திற் கமழ்ந்த வண்பரி
மளஅலர் துற்றக் கலந்தி டந்தரு
முகிழ்நுதி தைத்துத் துயர்ந்த மங்கைய - ரங்கமீதே
முகம்வெயர் வுற்றுப் பரந்து செங்கயல்
விழியிணை செக்கச் சிவந்து குங்கும
ம்ருகமத மத்தத் தனங்க ளின்மிசை - யெங்குமேவி
உகவுயி ரொத்துப் புயங்க ளின்புற
வுறவினை யுற்றுத் திரண்டு கொங்கள
வுறுமணை யுற்றுத் திரங்கு மஞ்சமி - லொன்றிமேவி
ஒளிதிகழ் பத்மக் கரங்க ளின்புற
முறுவளை யொக்கக் கலின்க லென்கவு
முயர்மய லுற்றுற் றிரங்கு மன்பொத - ழிந்திடாதோ
செகமுழு தொக்கப் பயந்த சங்கரி
அடியவர் சித்தத் துறைந்த சம்ப்ரம
சிவனொரு பக்கத் துறைந்த மங்கைசு - மங்கைநீடு
திகழ்வன பச்சைப் பசங்கி யம்பண
கரதலி கச்சுற் றிலங்கு கொங்கையள்
திருவரு ணற்பொற் பரந்தி டும்பரை - யண்டமீதே
பகலிர வற்றிட் டுயர்ந்த அம்பிகை
திரிபுரை முற்றிட் டிரண்டொ டொன்றலர்
பரிவுற வொக்கச் செயும்ப ரம்ப்ரமி - யன்புகூரும்
பதிவ்ரதை மிக்கச் சிரந்தெ ரிந்தருள்
பகிரதி வெற்பிற் பிறந்த பெண்தரு
பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் - தம்பிரானே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
81 |
| 185. முகைமுளரி |
ராகம் - தாளம் - |
தனதனன தனதான தனதனன தனதான தனதனன தனதான - தனதான |
| பாடல் |
முகைமுளரி ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலு
முதிர்விலிள தனபார - மடவார்தோள்
முழுகியமி ழநுபோக விழலனென வுலகோர்கள்
மொழியுமது மதியாமல் - தலைகீழ்வீழ்ந்
தகமகிழ விதமான நகையமுத மெனவூற
லசடரக மெழவாகி - மிகவேயுண்
டழியுமொரு தமியேனு மொழியுமுன திருதாளி
னமுதுபரு கிடஞான - மருளாயோ
மகரமெறி திரைமோது பகரகடல் தடவாரி
மறுகுபுனல் கெடவேலை - விடுவோனே
வரிசையவுண் மகசேனை யுகமுடிய மயிலேறி
வருபவனிரு கரதீர - முருகோனே
பகர்வரிய ரெனலாகு முமைகொழுந ருளமேவு
பரமகுரு வெனநாடு - மிளையோனே
பணிலமணி வெயில்வீசு மணிசிகர மதிசூடு
பழநிமலை தனில்மேவு - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
82 |
| 186. முதிர வுழையை |
ராகம் - தாளம் - |
தனன தனன தனத்த தனன தனன தனத்த தனன தனன தனத்த - தனதான |
| பாடல் |
முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்து
முதிய கயல்கள் கயத்தி - னிடையோடி
முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி
முறைமை கெடவு மயக்கி - வருமாதர்
மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு
வலிய அடிமை புகுத்தி - விடுமாய
மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்
மகிழ வுனது பதத்தை - யருள்வாயே
சதுரன் வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்து
சகடு மருத முதைத்த - தகவோடே
தழையு மரமு நிலத்தில் மடிய அமரை விளைத்த
தநுவை யுடைய சமர்த்தன் - மருகோனே
அதிர முடுகி யெதிர்த்த அசுர ருடலை வதைத்து
அமரர் சிறையை விடுத்து - வருவோனே
அரிய புகழை யமைத்த பெரிய பழநி மலைக்கு
ளழகு மயிலை நடத்து - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
83 |
| 187. முத்துக்குச் சிட்டு |
ராகம் - தாளம் - |
தத்தத்தத் தத்தத் தத்தன தத்தத்தத் தத்தத் தத்தன தத்தத்தத் தத்தத் தத்தன - தனதான |
| பாடல் |
முத்துக்குச் சிட்டுக் குப்பிமு
டித்துச்சுக் கைப்பிற் சுற்றியு
முற்பக்கத் திற்பொற் புற்றிட - நுதல்மீதே
முக்யப்பச் சைப்பொட் டிட்டணி
ரத்நச்சுட் டிப்பொற் பட்டிவை
முச்சட்டைச் சித்ரக் கட்டழ - கெழிலாடத்
தித்திக்கச் சொற்சொற் றுப்பிதழ்
நச்சுக்கட் கற்புச் சொக்கியர்
செப்புக்கொக் கக்கச் சுப்பெறு - தனமேருத்
திட்டத்தைப் பற்றிப் பற்பல
லச்சைக்குட் பட்டுத் தொட்டுயிர்
சிக்கிச்சொக் கிக்கெட் டிப்படி - யுழல்வேனோ
மெத்தத்துக் கத்தைத் தித்தியி
னிச்சித்தத் திற்பத் தத்தொடு
மெச்சிச்சொர்க் கத்திற் சிற்பர - மருள்வாயே
வித்தைக்குக் கர்த்ருத் தற்பர
முக்கட்சித் தர்க்குப் புத்திர
விச்சித்ரச் செச்சைக் கத்திகை - புனைவோனே
நித்யக்கற் பத்திற் சித்தர்க
ளெட்டுத்திக் குக்குட் பட்டவர்
நிஷ்டைக்கற் புற்றப் பத்தர்கள் - அமரோரும்
நெட்டுக்குப் புட்பத் தைக்கொடு
முற்றத்துற் றர்ச்சிக் கப்பழ
நிக்குட்பட் டத்துக் குற்றுறை - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
84 |
| 188. மூலம் கிளர் |
ராகம் - பேஹாக் தாளம் - திஸ்ர த்ருபுடை (7) |
தானந்தன தானன தானன தானந்தன தானன தானன தானந்தன தானன தானன - தனதான |
| பாடல் |
மூலங்கிள ரோருரு வாய்நடு
நாலங்குல மேனடு வேரிடை
மூள்பிங்கலை நாடியொ டாடிய - முதல்வேர்கள்
மூணும்பிர காசம் தாயொரு
சூலம்பெற வோடிய வாயுவை
மூலந்திகழ் தூண்வழி யேயள - விடவோடிப்
பாலங்கிள ராறுசி காரமொ
டாருஞ்சுட ராடுப ராபர
பாதம்பெற ஞானச தாசிவ - மதின்மேவிப்
பாடுந்தொனி நாதமு நூபுர
மாடுங்கழ லோசையி லேபரி
வாகும்படி யேயடி யேனையும் - அருள்வாயே
சூலங்கலை மான்மழு வோர்துடி
வேதன்தலை யோடும ராவிரி
தோடுங்குழை சேர்பர னார்தரு - முருகோனே
சூரன்கர மார்சிலை வாளணி
தோளுந்தலை தூள்பட வேஅவர்
சூளுங்கெட வேல்விடு சேவக - மயில்வீரா
காலின்கழ லோசையு நூபுர
வார்வெண்டைய வோசையு மேயுக
காலங்களி னோசைய தாநட - மிடுவோனே
கானங்கலை மான்மக ளார்தமை
நாணங்கெட வேயணை வேள்பிர
காசம்பழ னாபுரி மேவிய - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
85 |
| 189. மூல மந்திரம் |
ராகம் - சுப பந்துவராளி தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) தகிட - 1 1/2, தகதிமி - 2 |
தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன - தனதான |
| பாடல் |
மூல மந்திர மோத லிங்கிலை
யீவ திங்கிலை நேய மிங்கிலை
மோன மிங்கிலை ஞான மிங்கிலை - மடவார்கள்
மோக முண்டதி தாக முண்டப
சார முண்டப ராத முண்டிடு
மூக னென்றொரு பேரு முண்டருள் - பயிலாத
கோல முங்குண வீன துன்பர்கள்
வார்மை யும்பல வாகி வெந்தெழு
கோர கும்பியி லேவி ழுந்திட - நினைவாகிக்
கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு
கூர்மை தந்தினி யாள வந்தருள் - புரிவாயே
பீலி வெந்துய ராலி வெந்தவ
சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டரு - ளெழுதேடு
பேணி யங்கெதி ராறு சென்றிட
மாற னும்பிணி தீர வஞ்சகர்
பீறு வெங்கழு வேற வென்றிடு - முருகோனே
ஆல முண்டவர் சோதி யங்கணர்
பாக மொன்றிய வாலை யந்தரி
ஆதி யந்தமு மான சங்கரி - குமரேசா
ஆர ணம்பயில் ஞான புங்கவ
சேவ லங்கொடி யான பைங்கர
ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
86 |
| 190. முருகுசெறி குழலவிழ |
ராகம் - தாளம் - |
தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன - தனதான |
| பாடல் |
முருகுசெறி குழலவிழ முலைபுளக மெழநிலவு
முறுவல்தர விரகமெழ - அநுராகம்
முதிரவச மறவிதரி யெழுவகைவளை கலகலென
முகநிலவு குறுவெயர்வு - துளிவீச
அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிக
அகமகிழ இருகயல்கள் - குழையேற
அமளிபடு மமளிமல ரணையின் மிசை துயிலுகினும்
அலர்கமல மலரடியை - மறவேனே
நிருதனொடு வருபுரிய மடுகரியும் ரதநிரையும்
நெறுநெறன முறியவிடும் - வடிவேலா
நிகழகள சகளகுரு நிருபகுரு பரகுமர
நெடியநெடு ககனமுக - டுறைவோனே
வருமருவி நவமணிகள் மலர்கமுகின் மிசைசிதற
மதுவினிரை பெருகுவளி - மலைமீதே
வளர்குறவர் சிறுமியிரு வளர்தனமு மிருபுயமு
மருவிமகிழ் பழநிவரு - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
87 |
| 191. முருகு செறிகுழல் |
ராகம் - தாளம் - |
தனன தனதனன தனதன தனதன தனன தனதனன தனதன தனதன தனன தனதனன தனதன தனதன - தனதான |
| பாடல் |
முருகு செறிகுழல் முகிலென நகில்நறு
முளரி முகையென இளலென மயிலென
முறுவல் தளவென நடைமட வனமென - இருபார்வை
முளரி மடலென இடைதுடி யதுவென
அதர மிலவென அடியிணை மலரென
மொழியு மமுதென முகமெழில் மதியென - மடமாதர்
உருவ மினையன எனவரு முருவக
வுரைசெய் தவர்தரு கலவியி னிலவிய
வுலையின் மெழுகென வுருகிய கசடனை - யொழியாமல்
உவகை தருகலை பலவுணர் பிறவியி
னுவரி தனிலுறு மவலனை யசடனை
உனது பரிபுர கழலிணை பெறஅருள் - புரிவாயே
அரவ மலிகடல் விடமமு துடனெழ
அரிய யனுநரை யிபன்முத லனைவரும்
அபய மிகவென அதையயி லிமையவ - னருள்பாலா
அமர்செய் நிசிசர ருடலவை துணிபட
அவனி யிடிபட அலைகடல் பொடிபட
அமரர் சிறைவிட அடலயில் நொடியினில் - விடுவோனே
பரவு புனமிசை யுறைதரு குறமகள்
பணைகொ ளணிமுலை முழுகுப னிருபுய
பணில சரவணை தனில்முள ரியின்வரு - முருகோனே
பரம குருபர எனுமுரை பரசொடு
பரவி யடியவர் துதிசெய மதிதவழ்
பழநி மலைதனி லினிதுறை யமரர்கள் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
88 |
| 192. வசனமிக |
ராகம் - ரஞ்சனி தாளம் - அங்கதாளம் (7) (சதுஸ்ர ஜம்பை) தகிட - 1 1/2, தக - 1, தகிட - 1 1/2 தகதிமிதக - 3 |
| தனதனன தாத்த - தனதான |
| பாடல் |
வசன மிக வேற்றி - மறவாதே
மனதுதுய ராற்றி - லுழலாதே
இசைபயில்ஷ டாஷ - ரமதாலே
இகபரசௌ பாக்ய - மருள்வாயே
பசுபதிசி வாக்ய - முணர்வோனே
பழநிமலை வீற்ற - ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி - மிகவாழ
அமரர்சிறை மீட்ட - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
89 |
| 193. வஞ்சனை மிஞ்சிய |
ராகம் - தாளம் - |
தந்தன தந்தன தான தந்தன தந்தன தந்தன தான தந்தன தந்தன தந்தன தான தந்தன - தனதான |
| பாடல் |
வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்
வந்தவர் தங்களை வாதை கண்டவர்
வங்கண முந்தெரி யாம லன்புகள் - பலபேசி
மஞ்சமி ருந்தநு ராக விந்தைகள்
தந்தக டம்பிக ளூற லுண்டிடு
மண்டைகள் கண்டித மாய்மொ ழிந்திடு - முரையாலே
சஞ்சல முந்தரு மோக லண்டிகள்
இன்சொல்பு ரிந்துரு காத தொண்டிகள்
சங்கம மென்பதை யேபு ரிந்தவ - னயராதே
தங்களில் நெஞ்சக மேம கிழ்ந்தவர்
கொஞ்சிந டம்பயில் வேசை முண்டைகள்
தந்தசு கந்தனை யேயு கந்துடல் - மெலிவோனே
கஞ்சன்வி டுஞ்சக டாசு ரன்பட
வென்றுகு ருந்தினி லேறி மங்கையர்
கண்கள்சி வந்திட வேக லந்தரு - முறையாலே
கண்டும கிழ்ந்தழ காயி ருந்திசை
கொண்டுவி ளங்கிய நாளி லன்பொடு
கண்குளி ருந்திரு மால்ம கிழ்ந்தருள் - மருகோனே
குஞ்சர வஞ்சியு மான்ம டந்தையு
மின்பமி குந்திட வேய ணைந்தருள்
குன்றென வந்தருள் நீப முந்திய - மணிமார்பா
கொந்தவி ழுந்தட மேநி ரம்பிய
பண்புத ருந்திரு வாவி னன்குடி
குன்றுக ளெங்கினு மேவ ளர்ந்தருள் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
90 |
மேலே செல்க
| 194. வரதா மணி |
ராகம் - ராமப்ரியா தாளம் - அங்கதாளம் (6 1/2) தகதிமி - 2, தகதிமி - 2, தகதகிட - 2 1/2 |
| தனனா தனனா - தனதான |
| பாடல் |
வரதா மணிநீ - யெனவோரில்
வருகா தெதுதா - னதில்வாரா
திரதா திகளால் - நவலோக
மிடவே கரியா - மிதிலேது
சரதா மறையோ - தயன்மாலும்
சகலா கமநூ - லறியாத
பரதே வதையாள் - தருசேயே
பழனா புரிவாழ் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
91 |
| 195. வனிதையுடல் காய |
ராகம் - தாளம் - |
jதனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த - தனதான |
| பாடல் |
வனிதையுடல் காய நின்று வுதிரமதி லேயு ருண்டு
வயிறில்நெடு நாள லைந்து - புவிமீதே
மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்து
வயதுபதி னாறு சென்று - வடிவாகிக்
கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்று
கனிவதுட னேய ணைந்து - பொருள்தேடிக்
கனபொருளெ லாமி ழந்து மயலில்மிக வேய லைந்த
கசடனெனை யாள வுன்ற - னருள்தாராய்
புனமதனில் வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்த
புதல்வியித ழூற லுண்ட - புலவோனே
பொருமதனை நீறு கண்ட அரியசிவ னாரு கந்த
புதியமயி லேறு கந்த - வடிவேலா
பனகமணி மாம தங்கி குமரிவெகு நீலி சண்டி
பரமகலி யாணி தந்த - பெருவாழ்வே
பகையசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று
பழநிமலை மீதி னின்ற - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
92 |
| 196. வாதம் பித்த |
ராகம் - ஹம்ஸாநந்தி தாளம் - ஆதி - 2 களை |
தானந் தத்தன தானன தானன தானந் தத்தன தானன தானன தானந் தத்தன தானன தானன - தனதான |
| பாடல் |
வாதம் பித்தமி டாவயி றீளைகள்
சீதம் பற்சனி சூலைம கோதர
மாசங் கட்பெரு மூலவி யாதிகள் - குளிர்காசம்
மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி
யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு
வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் - வெகுமோகர்
சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ
டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய்
சோரம் பொய்க்குடி லேசுக மாமென - இதின்மேவித்
தூசின் பொற்சர மோடுகு லாயுல
கேழும் பிற்பட வோடிடு மூடனை
தூவஞ் சுத்தடி யாரடி சேரநி - னருள்தாராய்
தீதந் தித்திமி தீதக தோதிமி
டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
சேசெஞ் செக்கெண தோதக தீகுட - வெனபேரி
சேடன் சொக்கிட வேலைக டாகமெ
லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி
தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு - மயில்வீரா
வேதன் பொற்சிர மீதுக டாவிந
லீசன் சற்குரு வாயவர் காதினில்
மேவும் பற்றிலர் பேறரு ளோதிய - முருகோனே
வேஷங் கட்டிபி னேகிம காவளி
மாலின் பித்துற வாகிவி ணோர்பணி
வீரங் கொட்பழ னாபுரி மேவிய - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
93 |
| 197. வாரணந்தனை |
ராகம் - தாளம் - |
தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன - தனதான |
| பாடல் |
வார ணந்தனை நேரான மாமுலை
மீத ணிந்திடு பூணார மாரொளி
வால சந்திர னேராக மாமுக - மெழில்கூர
வார ணங்கிடு சேலான நீள்விழி
யோலை தங்கிய வார்காது வாவிட
வான இன்சுதை மோலான வாயித - ழமுதூறத்
தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடை
மீதில் நின்றிடை நூல்போலு லாவியெ
தோகை யென்றிட வாகாக வூரன - நடைமானார்
தோத கந்தனை மாமாயை யேவடி
வாக நின்றதெ னாஆய வோர்வது
தோணி டும்படி நாயேனுள் நீயருள் - தருவாயே
கார ணந்தனை யோராநி சாசரர்
தாம டங்கலு மீறாக வானவர்
காவ லிந்திர னாடாள வேயயில் - விடும்வீரா
கார்வி டந்தனை யூணாக வானவர்
வாழ்த ரும்படி மேனாளி லேமிசை
காள கண்டம காதேவ னார்தரு - முருகோனே
ஆர ணன்றனை வாதாடி யோருரை
ஓது கின்றென வாராதெ னாவவ
னாண வங்கெட வேகாவ லாமதி - விடும்வேலா
ஆத வன்கதி ரோவாது லாவிய
கோபு ரங்கிளர் மாமாது மேவிய
ஆவி னன்குடி யோனேசு ராதிபர் - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
94 |
| 198. விதமிசைந்தினி |
ராகம் - தாளம் - |
தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன - தனதான |
| பாடல் |
விதமி சைந்தினி தாமலர் மாலைகள்
குழல ணிந்தநு ராகமு மேசொலி
விதர ணஞ்சொலி வீறுக ளேசொலி - யழகாக
விரிகு ரும்பைக ளாமென வீறிய
கனக சம்ப்ரம மேருவ தாமதி
விரக மொங்கிய மாமுலை யாலெதி - ரமர்நாடி
இதமி சைந்தன மாமென வேயின
நடைந டந்தனர் வீதியி லேவர
எவர்க ளுஞ்சித மால்கொளு மாதர்கண் - வலையாலே
எனது சிந்தையும் வாடிவி டாவகை
அருள்பு ரிந்தழ காகிய தாமரை
இருப தங்களி னாலெனை யாள்வது - மொருநாளே
மதமி சைந்தெதி ரேபொரு சூரனை
யுடலி ரண்டுகு றாய்விழ வேசின
வடிவு தங்கிய வேலினை யேவிய - அதிதீரா
மதுர இன்சொலி மாதுமை நாரணி
கவுரி யம்பிகை யாமளை பார்வதி
மவுந சுந்தரி காரணி யோகினி - சிறுவோனே
பதமி சைந்தெழு லோகமு மேவலம்
நொடியில் வந்திடு மாமயில் மீதொரு
பவனி வந்தக்ரு பாகர சேவக - விறல்வீரா
பருதி யின்ப்ரபை கோடிய தாமெனும்
வடிவு கொண்டருள் காசியின் மீறிய
பழநி யங்கிரி மீதினில் மேவிய - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
95 |
| 199. விரைமருவு மலர |
ராகம் - தாளம் - |
தனதனன தனன தந்த தனதனன தனன தந்த தனதனன தனன தந்த - தனதான |
| பாடல் |
விரைமருவு மலர ணிந்த கரியபுரி குழல்ச ரிந்து
விழவதன மதிவி ளங்க - அதிமோக
விழிபுரள முலைகு லுங்க மொழிகுழற அணைபு குந்து
விரகமயல் புரியு மின்ப - மடவார்பால்
இரவுபக லணுகி நெஞ்ச மறிவழிய வுருகு மந்த
இருளகல வுனது தண்டை - யணிபாதம்
எனதுதலை மிசைய ணிந்து அழுதழுது னருள்வி ரும்பி
யினியபுகழ் தனைவி ளம்ப - அருள்தாராய்
அரவில்விழி துயில்மு குந்த னலர்கமல மலர்ம டந்தை
அழகினொடு தழுவு கொண்டல் - மருகோனே
அடலசுர ருடல்பி ளந்து நிணமதனில் முழுகி யண்ட
அமரர்சிறை விடுப்ர சண்ட - வடிவேலா
பரவைவரு விடம ருந்து மிடறுடைய கடவுள் கங்கை
படர்சடையர் விடைய ரன்ப - ருளமேவும்
பரமரரு ளியக டம்ப முருகஅறு முகவ கந்த
பழநிமலை தனில மர்ந்த - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
96 |
| 200. வேயி சைந்தெழு |
ராகம் - வராளி தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) தகிட - 1 1/2, தகதிமி - 2 |
தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன - தனதான |
| பாடல் |
வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய
மாதர் கொங்கையி லேமு யங்கிட
வீணி லுஞ்சில பாத கஞ்செய - அவமேதான்
வீறு கொண்டுட னேவ ருந்தியு
மேயு லைந்தவ மேதி ரிந்துள
மேக வன்றரி வேக லங்கிட - வெகுதூரம்
போய லைந்துழ லாகி நொந்துபின்
வாடி நைந்தென தாவி வெம்பியெ
பூத லந்தனி லேம யங்கிய - மதிபோகப்
போது கங்கையி னீர்சொ ரிந்திரு
பாத பங்கய மேவ ணங்கியெ
பூசை யுஞ்சில வேபு ரிந்திட - அருள்வாயே
தீயி சைந்தெழ வேயி லங்கையில்
ராவ ணன்சிர மேய ரிந்தவர்
சேனை யுஞ்செல மாள வென்றவன் - மருகோனே
தேச மெங்கணு மேபு ரிந்திடு
சூர்ம டிந்திட வேலின் வென்றவ
தேவர் தம்பதி யாள அன்புசெய் - திடுவோனே
ஆயி சுந்தரி நீலி பிங்கலை
போக அந்தரி சூலி குண்டலி
ஆதி யம்பிகை வேத தந்திரி - யிடமாகும்
ஆல முண்டர னாரி றைஞ்சவொர்
போத கந்தனை யேயு கந்தருள்
ஆவி னன்குடி மீதி லங்கிய - பெருமாளே. |
| வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! |
97 |
மேலே செல்க
முன்பக்கம்
|
|
|