அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
கோடைநகர் (வல்லக்கோட்டை)
703. ஆதிமுதனாளில்
ராகம் - மாயா மாளவ கௌளை
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2, தகிட - 1 1/2
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த - தனதான
பாடல்
ஆதிமுத னாளி லென்றன் தாயுட லியி ருந்து
ஆகமல மாகி நின்று - புவிமீதில்

ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
ஆளழக னாகி நின்று - விளையாடிப்

பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து
பூமிதனில் வேணு மென்று - பொருள்தேடிப்

போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
பூவடிகள் சேர அன்பு - தருவாயே

சீதைகொடு போகு மந்த் ராவணனை மாள வென்ற
தீரனரி நார ணன்றன் - மருகோனே

தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று
தேடஅரி தான வன்றன் - முருகோனே

கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
கோமளிய நாதி தந்த - குமரேசா

கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
கோடைநகர் வாழ வந்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 1

704. சாலநெடு
ராகம் -
தாளம் -
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த - தனதான
பாடல்
சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து
சாமளவ தாக வந்து - புவிமீதே

சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து
தாரணியி லேத வழ்ந்து - விளையாடிப்

பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள்
பாரதன மீத ணைந்து - பொருள்தேடிப்

பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்று
பாதமலர் சேர அன்பு - தருவாயே

ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள்
ஆடரவு பூணர் தந்த - முருகோனே

ஆனைமடு வாயி லன்று மூலமென வோல மென்ற
ஆதிமுதல் நார ணன்றன் - மருகோனே

கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை
கோவையமு தூற லுண்ட - குமரேசா

கூடிவரு சூர டங்க மாளவடி வேலெறிந்த
கோடைநகர் வாழ வந்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 2

705. ஏறானாலே
ராகம் -
தாளம் -
தானா தானா தானா தானா
தானா தானா - தனதானா
பாடல்
ஏறா னாலே நீறாய் மாயா
வேளே வாசக் - கணையாலே

ஏயா வேயா மாயா வேயா
லாமே ழோசைத் - தொளையாலே

மாறா யூறா யீறாய் மாலாய்
வாடா மானைக் - கழியாதே

வாராய் பாராய் சேரா யானால்
வாடா நீபத் - தொடைதாராய்

சீறா வீறா ஈரேழ் பார்சூழ்
சீரார் தோகைக் - குமரேசா

தேவா சாவா மூவா நாதா
தீரா கோடைப் - பதியோனே

வேறாய் மாறா யாறா மாசூர்
வேர்போய் வீழப் - பொருதோனே

வேதா போதா வேலா பாலா
வீரா வீரப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 3

706. ஞாலமெங்கும்
ராகம் - ஹம்ஸாநந்தி
தாளம் - அங்கதாளம் (10) (மிஸ்ர ஜம்பை /7/0)
தகிட தக திமி - 3 1/2, தகிட தக திமி - 3 1/2, தகதிமிதக - 3
தான தந்த தனத்த தத்த - தனதானா
பாடல்
ஞால மெங்கும் வளைத்த ரற்று - கடலாலே

நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் - வசையாலே

ஆலமுந்து மதித்த ழற்கும் - அழியாதே

ஆறி ரண்டு புயத்த ணைக்க - வருவாயே

கோல மொன்று குறத்தி யைத்த - ழுவுமார்பா

கோடை யம்பதி யுற்று நிற்கு - மயில்வீரா

கால னஞ்ச வரைத்தொ ளைத்த - முதல்வானோர்

கால்வி லங்கு களைத்த றித்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 4

707. தோழமை கொண்டு
ராகம் - பிருந்தாவன சாரங்கா
தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகதிமி தகதிமி - 4, தகிட தகதிமி - 3 1/2
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன - தனதான
பாடல்
தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்
ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்
சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் - பெரியோரைத்

தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள்
ஈவது கண்டுத கைந்த குண்டர்கள்
சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள் - தொலையாமல்

வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள்
நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள்
மானவ கந்தைமி குந்த குண்டர்கள் - வலையாலே

மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள்
தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள்
வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி - விழுவாரே

ஏழு மரங்களும் வன்கு ரங்கெனும்
வாலியு மம்பர மும்ப ரம்பரை
ராவண னுஞ்சது ரங்க லங்கையு - மடைவேமுன்

ஈடழி யும்படி சந்த்ர னுஞ்சிவ
சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற
ராம சரந்தொடு புங்க வன்திரு - மருகோனே

கோழி சிலம்பந லம்ப யின்றக
லாப நடஞ்செய மஞ்சு தங்கிய
கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல - வயலூரா

கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்
வேல னெனும்பெய ரன்பு டன்புகழ்
கோடை யெனும்பதி வந்த இந்திரர் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 5

708. தோடப் பாமற்றோய்
ராகம் -
தாளம் -
தானத் தானத் தானத் தானத்
தானத் தானத் - தனதான
பாடல்
தோடப் பாமற் றோய்தப் பாணிச்
சூழ்துற் றார்துற் - றழுவாருந்

தூரப் போகக் கோரப் பாரச்
சூலப் பாசச் - சமனாரும்

பாடைக் கூடத் தீயிற் றேறிப்
பாழ்பட் டேபட் - டழியாதே

பாசத் தேனைத் தேசுற் றார்பொற்
பாதத் தேவைத் - தருள்வாயே

ஆடற் சூர்கெட் டோடத் தோயத்
தாரச் சீறிப் - பொரும்வேலா

ஆனைச் சேனைக் கானிற் றேனுக்
காரத் தாரைத் - தரும்வீரா

கூடற் பாடிக் கோவைப் பாவைக்
கூடப் பாடித் - திரிவோனே

கோலச் சாலிச் சோலைச் சீலக்
கோடைத் தேவப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 6

709. வாசித்த நூல்
ராகம் -
தாளம் -
தானத்த தான தந்த தானத்த தான தந்த
தானத்த தான தந்த - தனதான
பாடல்
வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்து
வாய்மைப்ர காச மென்று - நிலையாக

மாசிக்க பால மன்றில் நாசிக்கு ளோடு கின்ற
வாயுப்பி ராண னொன்று - மடைமாறி

யோசித்த யாரு டம்பை நேசித்து றாத லைந்து
ரோமத்து வார மெங்கு - முயிர்போக

யோகச்ச மாதி கொண்டு மோகப்பி சாசு மண்டு
லோகத்தில் மாய்வ தென்று - மொழியாதோ

வீசப்ப யோதி துஞ்ச வேதக்கு லால னஞ்ச
மேலிட்ட சூர்த டிந்த - கதிர்வேலா

வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னால்ம யங்கி
வேடிச்சி காலி லன்று - விழுவோனே

கூசிப்பு காலொ துங்க மாமற்றி காத ரிந்த
கூளப்பு ராரி தந்த - சிறியோனே

கோழிப்ப தாகை கொண்ட கோலக்கு மார கண்ட
கோடைக்குள் வாழ வந்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 7

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com